2019-ல் ஜம்மு காஷ்மீர் 370வது ரத்து பிரிவு மசோதாவுடன் அமித்ஷா தாக்கல் செய்த "அந்த" 2 மசோதாக்கள்!
டெல்லி: 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்துஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் தொடர்பான மேலும் 2 மசோதாக்களையும் அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கில் மிக முக்கியமானது ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை எதிர்த்த மனுவும்தான். இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி நாடாளுமன்றத்தில் 370-வது பிரிவு ரத்து மசோதாவுடன் 2 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதில் ஒன்று ஜம்மு காஷ்மீர் மறுவரையறை மசோதா
(Jammu and Kashmir (Reorganisation) Bill, 2019). இந்த மசோதா மூலமாக ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலமானது 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
அதாவது ஜம்மு காஷ்மீர் என்கிற ஒரு யூனியன் பிரதேசகாவும் லடாக் என்ற மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிளவுபடுத்தப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை உண்டு; லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபையே கிடையாது என்றது அமித்ஷா கொண்டு வந்த அந்த தீர்மானம்.
அத்துடன் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா ஒன்றையும் (Jammu & Kashmir Reservation (2nd Amendment) Bill, 2019) அமித்ஷா அப்போது தாக்கல் செய்தார். அம்மசோதாவானது, ஜம்மு காஷ்மீரில் பொருளாதாரத்தில் பொன் தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யக் கூடியது. இந்த இரு மசோதாக்களும் அன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications