50 நாட்களில் 50 டாஸ்க்.. ப்ளூ வேல் சேலஞ்சை போல உயிரை பறிக்கும் கொரியன் லவ்வர் கேம்? பகீர் பின்னணி
டெல்லி: கொரிய கேமிற்கு அடிமையான 3 சிறுமிகளைப் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதைத் தாங்க முடியாமல் அந்தச் சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இந்தத் தற்கொலையைத் தொடர்ந்து அவர்கள் விளையாடிய கொரியன் லவ்வர் கேம் பேசுபொருள் ஆகியுள்ளது. சிலர் ப்ளூ வேல் சேலஞ்ச் உடன் அதை ஒப்பிடுகிறார்கள்.
தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட காசியாபாத்தில், ஆன்லைன் கொரிய கேமிற்கு அடிமையான மூன்று இளம் சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டனர். நிஷிகா (16), பிராச்சி (14), பாகி (12) ஆகிய 3 சகோதரிகள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தங்கள் குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாகக் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்..

தற்கொலை
தங்கள் பெற்றோருக்கு இவர்கள் எழுதியிருந்த தற்கொலை கடிதத்தில், "ஸாரி அப்பா... கொரியாவை விட்டு விலக முடியாது. அதுவே எங்கள் வாழ்க்கை, அதிலிருந்து நீங்கள் எங்களைப் பிரிக்க முடியாது. அதனால்தான் தற்கொலை செய்கிறோம்" எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இவர்கள் தற்கொலையைத் தொடர்ந்து 'கொரியன் லவ்வர் கேம்' இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த கேம் ஒரு தீம் அடிப்படையிலான ஆன்லைன் காதல் விளையாட்டு. இந்த கேமை விளையாடுவோர் விர்சுவல் பார்ட்னர்கள் உடன் உரையாடுவார்கள். கொரிய நாடகங்கள் (K-dramas) மற்றும் பாப் இசை (K-pop) போன்ற கொரிய பாப் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட இந்த கேமை செல்போன் மற்றும் இணையத்திலும் விளையாடலாம்.
50 டாஸ்க்குகள்
இந்த கேமில் மொத்தம் 50 டாஸ்க்குகள் இருப்பதாக இந்தியா டுடே அறிக்கை கூறுகிறது. கேமை விளையாடுவோர் முதலில் தங்கள் விர்சுவல் நண்பரைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு அவர்கள் அவர் கொரிய மொழியில் பாசமான மெசேஜ்களை அனுப்புவார்கள். மேலும், சில குறிப்பிட்ட டாஸ்குகளையும் வழங்குவார்கள். ஆரம்ப டாஸ்குகள் எளிதாக இருக்கும். இதனால் சட்டென முடித்துவிட முடியும். ஆனால், லெவல் அதிகரிக்கும்போது அவை அதிகச் சவாலானதாகவும் பெர்சனலாகவும் மாறும். சில சமயங்களில் ஆபத்தானதாகவும் மாறும் எனக் கூறப்படுகிறது.
போலீஸ் சொல்வது என்ன
கொரோனா காலத்தில் 3 சகோதரிகளும் வீடுகளிலேயே இருந்ததால் ஒன்றாக அதிக நேரம் செலவிட்டுள்ளனர். அப்போது தான் அவர்கள் கேமை விளையாட ஆரம்பித்துள்ளனர். விளையாட்டிற்கு அவர்கள் அடிமையான நிலையில், அவர்கள் தங்களை இந்தியர்கள் அல்ல, கொரிய இளைஞர்கள் என்றே கருதினர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "சகோதரிகள் ஒரு டைரியில் மன்னிப்பு கேட்டு இருந்தனர். விளையாட்டில் மிகவும் அடிமையாகி, தங்களை இந்தியர் அல்ல, கொரியர்கள் என்றே நம்பியிருந்தனர். இதுவே அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
ப்ளூ வேல் சேலஞ்ச்
சிலர் இந்தக் கொரியன் லவ்வர் கேமை சர்ச்சைக்குரிய 'ப்ளூ வேல் சேலஞ்ச்' விளையாட்டு உடனும் ஒப்பிடுகிறார்கள். ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட அந்த 'ப்ளூ வேல் சேலஞ்ச்' கேமிலும் 50 நாட்களில் 50 டாஸ்க்குகள் வழங்கப்படும். ஆரம்பத்தில் "நள்ளிரவு எழுவது" அல்லது "பேய் படம் பார்ப்பது" போன்ற டாஸ்குகள் இருக்கும். ஆனால், இறுதிக் கட்டத்தில் "உயரமான கட்டிடத்தின் விளிம்பில் நிற்பது" உள்ளிட்ட ஆபத்தான டாஸ்குகளாக மாறும், இறுதியில் தற்கொலைக்குக் கூட தள்ளும். அந்த கேம் உடன் சிலர் இந்தக் கொரியன் லவ்வர் கேமையும் ஒப்பிடுகிறார்கள்.
ப்ளூ வேல் சேலஞ்ச் போல இதில் உயிருக்கு ஆபத்தான டாஸ்குகள் எதுவும் இல்லை என்றாலும் இது இளம் வயதினரை மிக மோசமாக அடிமையாக்கிவிடுவதாகக் கூறுகிறார்கள். இதை விளையாடும் பலரும் தங்களைக் கொரியர்கள் என நினைக்கும் அளவுக்கு அடிமையாக்கிவிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications