"மியாவ் மியாவ்.." இது பூனை இல்லை.. புது வகை போதை செடி.. இந்தியாவில் நுழைந்த புதிய போதை போருள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மியாவ் மியாவ் என்று பூனைக் குட்டி கத்தும் என்பது அனைவருக்கும் தெரியுமா.. ஆனால், இதே பெயரில் அலறவிடும் போதைப் பொருளை நமது நாட்டின் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில காலமாகவே போதைப் பொருள் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி, ரெய்டு நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

 What is Meow Meow Drug, ₹ 2,500 Crore Worth seized in Delhi and Pune

அப்படி இருந்தாலும் கூட பல்வேறு முறைகேடான வழிகளில் போதைப் பொருளை இந்தியாவுக்குள் எடுத்து வரும் நிகழ்வுகளும் கூட இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

மியாவ் மியாவ்: அதன்படி புனே மற்றும் டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான 'மியாவ் மியாவ்' போதைப் பொருளை போலீசார் பிடித்துள்ளனர். இந்த போதைப் பொருளின் உண்மையான பெயர் எம்டி எனப்படும் மெபெட்ரோன் ஆகும். இருப்பினும், இதை பொதுவாக மியாவ் மியாவ் போதைப் பொருள் என்றே மருத்துவர்கள் அழைப்பார்களாம். சுமார் 2 நாட்கள் நடத்திய அதிரடி ரெய்டில் சுமார் 1,100 கிலோ எடையுள்ள இந்த போதைப்பொருளை போலீசார் பிடித்துள்ளனர்.

முதலில் புனேவில் மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் பிடித்த கைது நிலையில், அப்போது தான் இந்த மெகா ரெய்டு தொடங்கியது. அவர்களிடம் இருந்து மட்டும் சுமார் 700 கிலோ மியாவ் மியாவ் போதையைப் பொருளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள குடோனில் இருந்து கூடுதலாக 400 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எங்கு ரெய்டு: இவை தவிர புனே குர்கும்ப் பகுதியிலும் இந்த மியாவ் மியாவ் போதைப் பொருளை அவர்கள் பதுக்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த மிகப் பெரிய போதைப்பொருள் ரெய்டுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. புனேவில் இருந்து இவர்கள் போதைப் பொருளை டெல்லிக்குக் கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக இருவரை ஏற்கனவே கைது செய்த போலீசார், ரெய்டின் போது கூடுதலாக 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

ரெய்டின் போது கைது செய்யப்பட்ட 3 பேர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்தில் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்துக் கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இவர்களுக்குப் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் லலித் பாட்டீலுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவேக இந்த கோணத்தில் போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதென்ன மியாவ் மியாவ் போதைப் பொருள்: Mephedrone எனப்படும் இந்த மியாவ் மியாவ் போதைப் பொருள் ஒரு வகையான செடிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது நமது உடலிலும் சரி, மன ரீதியாகவும் சரி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இதை எடுத்துக் கொள்ளும் போது காரணமே தெரியாமல் நாம் ஓவர் மகிழ்ச்சியாக இருப்போம். ஏதோ ஒரு சந்தோஷமான உணர்வு நமக்கு அதிகமாகவே இருக்கும்.

அதேநேரம் தொடர்ச்சியாக இதை எடுத்துக்கொள்ளும் போது சில பக்கவிளைவுகளும் இதில் ஏற்படுத்துமாம். கவலை, சித்தப்பிரமை, குமட்டல் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+