"எதிரிகள் கண்களில் மண்ணை தூவும்.." சாதித்த இந்தியா! பிரதமர் சொன்ன MIRV ஏவுகணை! இதுல இவ்வளவு இருக்கா
டெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட MIRVed தொழில்நுட்பம் மூலம் இயங்கும் அக்னி ஐந்து ரக ஏவுகணையான திவ் அஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த MIRVed என்றால் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாகத் தகவல் வெளியானது. மாலை 5.30 மணியளவில் அவர் உரையாற்றுவார் என கூறப்பட்டது. இருப்பினும், அவர் உரையாற்றவில்லை..

பிரதமர் மோடி: மாறாக அவர், ட்வீட் மட்டும் பதிவிட்டுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஐந்து ரக ஏவுகணை திவ்யாஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இது பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை MIRVed தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அதென்ன MIRVed. இதில் உள்ள சிறப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்ன தொழில்நுட்பம்: இந்த Multiple Independently-targetable Reentry Vehicles என்பது முதலில் 1960களில் டெவலப் செய்யப்பட்ட ஒரு ராணுவ தொழில்நுட்பமாகும். ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை நோக்கி அணு ஆயுதங்களை ஏவ அனுமதிப்பதே இதன் திட்டமாகும். பொதுவாக வழக்கமான ஏவுகணையில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணையில் பல்வேறு குண்டுகளை எடுத்துச் செல்ல முடியும்.
உதாரணமாக, ரஷ்ய உருவாக்கி வரும் MIRV ஏவுகணையில் ஒரே நேரத்தில் 16 குண்டுகளை எடுத்துச் செல்ல முடியும், அதில் ஒவ்வொரு குண்டையும் எந்த டார்கெட்டை நோக்கியும் அனுப்பலாம். எந்த வேகத்தில் வேண்டுமானாலும் எந்த திசையை நோக்கியும் இந்த MIRVedஇல் இருந்து அனுப்பலாம். சில வரை MIRVed ஏவுகணைகள் 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கும்.
ஏன் முக்கியம்: இது வழக்கமான ஏவுகணைகளைக் காட்டிலும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் வழக்கமான ஏவுகணைகளால் ஒரே திசையை நோக்கித் தான் தாக்க முடியும். அதுவும் அதில் இருக்கும் அத்தனை குண்டுகளும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும்.
ஆனால், இந்த MIRVed ஏவுகணையில் ஒரே டார்கெட்டை நோக்கிக் கூட பல திசைகளில் இருந்தும் தாக்க முடியும். இது எதிராளிகளுக்கு கடும் சவாலாக இருக்கும் MIRVகள் ஆரம்பத்தில் பாலிஸ்டிக் ஏவுகணையைத் தோற்கடிக்க வடிவமைக்கப்படவில்லை என்றாலும், வழக்கமான ஏவுகணைகளை விட அவற்றை சமாளிப்பது ரொம்பவே கடினம்.
எந்தெந்த நாடுகள்: அமெரிக்கா தான் இந்த தொழில்நுட்பத்தை முதலில் உருவாக்கியது. கடந்த 1970ஆம் ஆண்டு அமெரிக்கா முதலில் இந்த MIRV ஏவுகணைகளை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் இதை உருவாக்கியது. இப்போது இந்த இரு நாடுகளைத் தவிர்த்து பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த தொழில்நுட்பம் இருக்கிறது. இப்போது இந்த லிஸ்டில் இந்தியாவும் இணைகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications