பாஜக அரசுக்கு விஷப்பரிட்சை.. ஆட்சியையே கவிழ்க்கும் முறை! நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன?
டெல்லி: மக்களவையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கும் நிலையில், அப்படியென்றால் என்ன? அதனால் ஏற்படும் விளைவும் என்ன? என்பது பற்றி அலசுவோம்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச வலியுறுத்தியும், மாநிலங்களவையில் முழு நாள் விவாதத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 5 நாட்களாக இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக இன்று காலை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளித்து உள்ளன. இது தொடர்பாக விவாதிப்பது குறித்து சபாநாயகர் முடிவு செய்வார். இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த உங்களுக்கு எழும் கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.
நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன?
நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நாடாளுமன்றத்தில் ஒரு அரசாங்கத்தின் பெரும்பான்மைக்கு சவால் விடுக்கும் ஒரு நாடாளுமன்ற நடைமுறையாகும். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவளித்து அது நிறைவேற்றப்பட்டால், அரசு பதவி விலக வேண்டும். இப்படி சில அரசுகள் கவிழ்ந்து உள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை யார் கொண்டு வர முடியும்?
மக்களவையில் உள்ள எந்த உறுப்பினராலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியும். ஆனால், குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தால் மட்டுமே தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
எவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது?
நம்பிக்கையில்லா தீர்மானம் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். அதை கொண்டு வரும் மக்களவை உறுப்பினர் கையெழுத்திட வேண்டும். மக்களவை சபாநாயகரிடம் அவை கூடியிருக்கும் சமயத்தில் அது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின் என்ன நடக்கும்?
மக்களவை சபாநாயகர் தீர்மானம் மீதான விவாதத்திற்கு அனுமதிப்பார். தீர்மானத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் விவாதத்திற்கான நாள் மற்றும் நேரத்தை முடிவு செய்வார். லோக்சபா விதிகளின் 198 வது விதி (2) மற்றும் (3) இன் கீழ் சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்திற்கு நேரம் அளிக்கலாம்
நம்பிக்கையில்லா தீர்மானம் எவ்வாறு விவாதிக்கப்படுகிறது?
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்படும். தீர்மானத்தை சமர்ப்பித்த உறுப்பினர் அதை கொண்டு வருவார், பின்னர் அரசாங்கம் தரப்பில் அந்த தீர்மானத்திற்கு பதிலளிக்கப்படும். அதன் பின்னர் தீர்மானம் குறித்து பேசும் வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்படும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எப்படி வாக்கெடுப்பு நடக்கும்?
ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்குப் பிறகு, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும்?
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மத்திய அரசாங்கம் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றால், தீர்மானம் தோல்வி அடைந்ததாக அர்த்தம். அரசாங்கம் ஆட்சியில் தொடரும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications