மதுரை எய்ம்ஸ் பணி எப்போது தொடங்கும்? விருதுநகர் எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் தந்த பதில்
டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி எப்போது தொடங்கும்? எப்போது பணிகள் முழுமையாக முடிக்கப்படும்? என்பது பற்றி விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2015ம் ஆண்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்து 2019ம் ஆண்டில் மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைப்பதில் தாமதம், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியதால் தாமதம் உள்ளிட்டவை தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தாமதம் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் அலட்சியம் காட்டுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் பாஜக சார்பில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே மதுரை எய்ம்ஸ் பணிக்கான மதிப்பீடு என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. அதோடு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ந்நிலையில் தான் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக அவர், ‛‛எனது தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டாலும் கூட இப்போது வரை பணிகள் தொடங்கவில்லை. இதனால் அமைச்சரிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். எப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கும்? எப்போது அந்த பணிகள் முழுவதுமாக முடிக்கப்படும்? என்பதை விளக்க வேண்டும். ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக காத்து நிற்கிறது'' என்றார்.
இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் திட்டத்துக்கான நிதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வரும்'' என்றார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தமட்டில் 750 படுக்கைகள் தான் இருக்கும். ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக 150 படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மதுரை மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications