கெமிக்கலை போட்டால் செயற்கை மழை! காற்று மாசை குறைக்க வேற லெவல் திட்டம்! சாதிக்கும் இந்திய ஆய்வாளர்கள்
டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் காற்று மாசால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், இதற்குக் கலக்கல் தீர்வை கான்பூர் ஐஐடி முன்வைத்துள்ளது. இது நிச்சயம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வந்துவிட்டாலே காற்று மாசு குறித்த பேச்சும் கிளம்பும். அதுவும் சமீப ஆண்டுகளில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.

டெல்லி போலக் காற்று மாசால் திணறும் மாநிலங்கள் முற்றிலுமாக பட்டாசுகளுக்கு தடை விதித்து வருகின்றன. மறுபுறம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி தரப்பட்டு வருகிறது.
புது தீர்வு: இப்படி காற்று மாசு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கும் சூழலில், இதைச் சமாளிக்க ஐஐடி கான்பூர் ஒரு புதிய தீர்வை முன்வைத்துள்ளது. அதாவது குறிப்பிட்ட வகையான உப்புகளின் கலவையை மேகங்களுக்கு நடுவே போடுவதன் மூலம் செயற்கை மழையை உருவாக்குவதே இவர்கள் திட்டமாகும். இதன் மூலம் காற்று மாசு வெகுவாக குறையும்.
அதேநேரம், என்னதான் உடனடியாக இந்த நடவடிக்கைகளைத் தொடங்கினாலும் இந்த வாரத்திற்குள் இதைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு ஐஐடி கான்பூரின் கணினி அறிவியல் துறையின் பேராசிரியர் மனீந்திர அகர்வால் தலைமையில் நடந்து வருகிறது இது குறித்து அவர்கள் கூறுகையில், "வரும் வாரத்தில் வானத்தில் மழை மேகங்கள் எதுவும் இருக்காது என்றே வானிலை அறிக்கைகள் கூறுகின்றனர்.
வானிலை எப்படி: சரியான வானிலை சூழல் வரும் போது இதைச் செய்யலாம். அதற்குள் இதற்கான அனுமதியைப் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து அனுமதி வாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். கடந்த வாரம், தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. அங்குள்ள பொதுமக்கள் உடல்நிலையை ஆபத்தான சூழலில் தள்ளும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இதையடுத்து மத்திய மாநில அரசுகள் நிலைமையைக் கட்டுப்படுத்தி காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுக்கு ஒரு நிவாரணத்தைத் தரும் இந்த செயற்கை மழை, அவர்களுக்கான சுத்தமான காற்றையும் தரும். தீபாவளி சமயத்தில் மழை மேகங்கள் வரும் என்றும் செயற்கை மழையை ஏற்படுத்த அது சரியான சூழலாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
Cloud seeding என்றால் என்ன: இதை மேக விதைப்பு, அதாவது Cloud seeding என்று குறிப்பிடுகிறார்கள். இந்த முறையில் சில்வர் அயோடைடு, ட்ரை ஐஸ், ராக் சால்ட் உள்ளிட்ட பல்வேறு ரசாயனப் பொருட்களை மேகங்களில் போடுவார்கள். இது மேகத்தின் அடர்த்தியை அதிகரித்து மழையை ஆரம்பித்து வைக்கும்.
இது தொடர்பாக மகேந்திரா அகர்வால் மேலும் கூறுகையில், "இந்த செயல்முறையைச் சரியாக மேக விதைப்பு எனக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாகச் செடி வளர நாம் விதைகளை விதைப்போம். அதேபோல மழைக்காக விதைகளை நடவு செய்வது தான் இந்த செயல்முறை. ரசாயனங்களின் கலவையை மேகங்களுக்குள் போடுவோம். அது நமக்கு மழையைத் தருகிறது.
எப்படி வேலை செய்யும்: மழை மேகங்களில் பொதுவாகவே ஈரப்பதம் இருக்கும். அப்போது நாம் இந்த குறிப்பிட்ட ரசாயனங்களைப் போடும் போது அது மழை மேகங்களின் அடர்த்தியை அதிகரிக்கிறது. மழை மேகங்கள் குறிப்பிட்ட எடையை அடைந்தவுடன், அது மழையைத் தூண்டுகிறது. அங்கே எந்தளவுக்கு மழை மேகங்கள் இருக்கிறதோ.. அதைப் பொறுத்து மழை இருக்கும். மழையை ஆரம்பித்து வைப்பது மட்டுமே இந்த செயல்முறை. மற்றபடி மழை எந்தளவுக்குப் பெய்யும் என்பதில் பல காரணங்கள் உள்ளன" என்றார்.
கடந்த ஜூன் மாதம் ஐஐடி கான்பூர் வளாகத்தில் இந்த மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கான சோதனையை அகர்வால் டீம் வெற்றிகரமாக நடத்தியது. அப்போது அவர்கள் விமானத்தின் உதவியுடன் 5,000 அடி உயரத்தில் உள்ள அடர்த்தியான மேகங்களில் இந்த கெமிக்கல்களை போட்டார்கள். அது கணிசமான மழையைக் கொடுத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எவ்வளவு செலவாகும்: ஒட்டுமொத்தமாக, விமானம், கெமிக்கல், கருவிகள் என இந்த செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுமார் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இப்போது தான் இது வெற்றியடைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரசாயன கலவையை விமானத்தின் இறக்கைகளில் பொருத்துவார்கள். அது மழை மேகங்களில் செல்லும் போது அந்த கெமிக்கலை ரிலீஸ் செய்வார்கள். அது மழை மேகங்களை அடர்த்தியானதாக மாற்றி மழையைத் தரும்.
செலவு அதிகம்: முதலில் இதற்கான கெமிக்கலை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டனர். ஆனால், அதற்குள் கொரோனா கிளம்பிய நிலையில், கெமிக்கலை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதுவே தாமதத்திற்குக் காரணமாகும். இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதை வைத்து காற்று மாசை குறைக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications