இந்தியாவின் மிக பெரிய பிரச்சினை.. இதே நிலை தொடர்ந்தால் ரொம்ப மோசம்.. எச்சரிக்கும் நாராயண மூர்த்தி
டெல்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது என்ன என்பதை விளக்கிய இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி, பல ஆண்டுகளாக நாம் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இப்போது உலகிலேயே மிகப் பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா உலகில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

உலகமே கொரோனா உள்ளிட்ட சமயங்களில் பொருளாதார ரீதியாகத் தள்ளாடிய போதிலும் இந்தியாவில் அதன் தாக்கம் பெரியளவில் ஏற்படவில்லை. இதற்கிடையே இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினை என்ன என்பதை நாராயண மூர்த்தி விளக்கியுள்ளார்.
நாராயண மூர்த்தி: இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் நமது நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்ன என்பதை விளக்கிப் பேசினார். அதாவது நமது நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு தான் பெரும் சவாலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார், எமர்ஜென்சி காலத்திற்குப் பிறகு இந்தியர்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நாராயண மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது தான் அவர் இந்தக் கருத்துகளைக் கூறினார். நாராயண மூர்த்தி மேலும் கூறுகையில், "மக்கள் தொகை அதிகரிப்பு, தனிநபருக்கான நில இருப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்கச் சவால்களை எதிர்கொள்கிறது
மக்கள் தொகை அதிகரிப்பு: இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் மக்கள் தொகை தான். எமர்ஜென்சி காலத்திற்குப் பிறகு மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த நாம் தவறிவிட்டோம். இந்தியர்களாகிய நாம் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் போதிய கவனம் செலுத்தவில்லை. இது நம் நாட்டிற்கு மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் இங்கே ஒவ்வொரு நபருக்கும் இருக்கும் நிலமும் மிக குறைவாக இருக்கிறது. , அமெரிக்கா, பிரேசில் அவ்வளவு ஏன் சீனாவில் கூட தனிநபர்- நில விகிதம் அதிகமாகவே இருக்கிறது" என்றார்.
பொறுப்பு என்ன: மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதே நேர்மையான தொழிலதிபரின் பொறுப்பு என்றும் நாராயண மூர்த்தி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "நீங்கள் மிகப் பெரிய கனவைக் கொண்டிருக்க வேண்டும். இந்த பெரிய கனவை நிறைவேற்ற அதிகம் உழைக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் வளர்ச்சி உங்களுக்கானது மட்டும் இல்லை.. அது நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
அடுத்த தலைமுறையினர் சிறப்பாக இருக்க நாம் பல தியாகங்களைச் செய்ய வேண்டும். எனது முன்னேற்றத்திற்காக எனது பெற்றோர்கள், உடன்பிறப்புகள் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்கத் தியாகங்களைச் செய்தனர்.. அவர்களின் தியாகங்கள் வீண் போகவில்லை என்பதற்கு இங்கு விருந்தினராக வந்து இருப்பதே சாட்சி" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications