Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நமோ பாரத்!" 160 கிமீ வேகத்தில் சல்லுனு பாயும்! பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்! இனி ஜாலியாக போகலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ரேபிட் டிரான்ஸிட் ரயிலுக்கு "நமோ பாரத்" என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதைப் பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

இந்தியன் ரயில் துறை இப்போது புதிது புதிதாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இவர்கள் அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போது அவர்கள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

 What is the Namo Bharat, Indias First RRTS Train Flagged Off By PM Modi Tomorrow

இது இந்திய ரயில்வே-இல் வந்து மிக முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது தவிர ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய ரயில்வே துறை எடுத்து வருகிறது.

நமோ பாரத்: அதன்படி இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ள ஒரு முக்கியமான திட்டம் RRTS - Regional Rapid Transit System. குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் முதல் ரயில் நாளைய தினம் சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே இயக்கப்பட உள்ளது. "நமோ பாரத்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலை நாளைய தினம் கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

டெல்லி-காசியாபாத்-மீரட் ஆர்ஆர்டிஎஸ் இடையே இந்த வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 17 கிமீ நீளமுள்ள சாஹிபாபாத் மற்றும் துஹாய் வழித்தடத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தான் நாளைய தினம் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இப்போது சாஹிபாபாத் மற்றும் துஹாய் இடையே பயணிக்க 30 முதல் 35 நிமிடங்கள் ஆகும் நிலையில், இந்த ரயில் மூலம் பயண நேரம் 12 நிமிடங்களாகக் குறையும்.

எந்த ரூட்: மேலும், டெல்லி-காசியாபாத்-மீரட் ஆர்ஆர்டிஎஸ் முழுக்க இந்த ரூட்டை விரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அது முழு வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 82 கிமீ தொலைவில் இருக்கும் டெல்லி- மீரட் செல்ல இப்போது இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், இந்த ரேபிட் ரயில் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் ஒரு மணி நேரமாகக் குறையும் எனக் கூறப்படுகிறது. இந்த புது டைப் ரயிலுக்குப் பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் அட்டாக்: நமோ பாரத் என இந்த ரயிலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதைக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "முதலில் நமோ ஸ்டேடியம்.. இப்போது நமோ ரயில்கள். அவரது சுய பெருமைக்கு எல்லையே இல்லை" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, பேசாமல் நாட்டின் பெயரையே "நமோ" என்று மாற்றிவிடலாம் என சாடியுள்ளார்.

இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில்கள் இப்போது இயங்கும் புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோக்கள் என இரண்டிலிருந்தும் வேறுபட்டது. வேகம், நேரம் தவறாமை எனப் பல காரணங்களால் இது ஒரு நகரை இருந்து மற்றொரு நகருக்கு இணைக்கும் வழக்கமான ரயில்களை விட இது சிறந்தது. அதேபோல மெட்ரோவில் நாம் நகருக்குள் மட்டுமே சென்றுவர முடியும். ஆனால், இதில் அப்படி இல்லை. இரு நகரங்களை இணைக்கிறது. குறைவான நிறுத்தங்களைக் கொண்ட இது அதிவேகமாகச் செல்லும் என்பதால் நீண்ட தூரத்திற்கு எளிதாகப் பயணிக்கலாம்.

இந்த ரயில்களில் அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். 160 கிமீ வேகத்தில் இதை சோதனையும் செய்துள்ளனர். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் முதலில் 100 கிமீ வேகத்தில் மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+