ராயல் என்ஃபீல்டுக்கு பெட்ரோல் போட்டு முடியலையா! வந்தாச்சு மாஸ் தீர்வு.. வேற லெவல் மைலேஜ்! எவ்வளவு
டெல்லி: இங்கே பலரது கனவாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் மைலேஜ் தான் பெரிய பிரச்சினையாக இருக்கும். இப்போது அதற்கும் ஒரு அட்டகாசமான தீர்வு வந்துவிட்டது.
நமது நாட்டில் கடந்த பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமலேயே இருந்து வருகிறது. இருப்பினும், ஒப்பீட்டளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகவே இருக்கிறது.

நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்டது. அதேபோல டீசல் விலை 100 நெருங்கி வருகிறது. இப்படி பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராயல் என்ஃபீல்டு: இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை எரிபொருளுக்கே செலவிட வேண்டிய சூழலே இருக்கிறது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு, டியூக் போன்ற பைக் வைத்திருப்பவர்கள் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. ராயல் என்ஃபீல்டு பைக் எல்லாம் லிட்டருக்கு 25 -30 கிலோமீட்டர் கிடைத்தாலே பெரிய விஷயம். பெட்ரோல் இந்த விலையில் விற்க ராயல் என்ஃபீல்டு வைத்திருப்பவர்கள் எல்லாம் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
வெளியே ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கிறோம் எனக் கெத்தாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் போடும்போது அவர்களின் மைண்ட் வாய்ஸ் நமக்கே கேட்கும். கூடுதலாக ஓரிரு மைலேஜ்கிற்காகவே அவர்கள் பெரும் போராட்டமே நடத்துகின்றனர். அப்படியிருக்கும் போது, ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் நமக்குப் பல கிமீ கூடுதலாக பைலேஜ் கிடைத்தால் எப்படி இருக்கும். அதிலும் பெட்ரோலே போடத் தேவையில்லை என்றால் எவ்வளவு ஹேப்பியாக இருக்கும்.
இதெல்லாம் நடக்குற காரியமா என்கிறீர்களா.. ஆம் உண்மையில் இது நிஜமாகவே நடக்கப் போகிறது.. உலகின் மிகப் பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு, மின்சார சந்தையில் நுழையப்போகிறது. இப்போதே நீங்கள் சாலைகளில் பார்த்தால் மின்சார வாகனங்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது.
மின்சார வாகனங்கள்: டெய்லி பெட்ரோல் போட்டுச் சமாளிக்க முடியாது என்பதால் பலரும் இப்போது மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். எனவே, மின்சார வாகனங்கள் தான் எதிர்காலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாதமும் மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குச் சாட்சி. டாப் நிறுவனங்களும் இதில் இணைந்து வரும் நிலையில், இப்போது ராயல் என்ஃபீல்டும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.
புது மின்சார பைக்கை உருவாக்கும் பணிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தச் சூழலில், இதற்கான சோதனை ப்ரோடோடைப் வாகனம் இந்த ஆண்டு இறுதியில் தயாராகும் என்றும் முழு வீச்சில் வாகனம் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்தாண்டில் விற்பனை தொடங்கும் என்றும் ராயல் என்ஃபீல்டு அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு தனியாக ஒரு பைக்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஸ்டார்க் மோட்டார்சைக்கிள் எனப்படும் ஸ்பானிஷ் எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் இணைந்து தற்போது Varg EV என்ற பைக்குகளையும் அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
சூப்பர் பிளான்: ஆஃப்-ரோட் மோட்டார் சைக்கிளான இந்த Varg EV 80 குதிரைத்திறனைக் கொண்டது. 110 கிலோ எடை கொண்ட இந்த பைக்கை 2 மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும், 6 மணிநேரம் பயணிக்க முடியும்.
ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மின்சார பைக்குகளாக வரும்போது, அதை எப்படி விற்பனை செய்ய போகிறார்கள் என்பது பெரிய கேள்வி.. ராயல் என்ஃபீல்டு என்றாலே அதன் சத்தமும் தோற்றமும் தான் அனைவருக்கும் நினைவில் வரும். இந்த இரண்டையும் ராயல் என்ஃபீல்டு எப்படி உருவாக்க போகிறது என்பதே இப்போது நம்முன் இருக்கும் பெரிய கேள்வியாக இருக்கிறது.
இந்த புதிய எலெக்ட்ரிக் ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் சென்னையின் புறநகரில் உள்ள வல்லம் வடகால் ஆலையில் உருவாக்கப்படும் என்றும் இந்த பைக்குகள் 2025ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications