"ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா!" நான்கையும் தட்டி தூக்கும் காங்கிரஸ்! சொல்வது யார் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் அடுத்தாண்டு ஏப்ரல் மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என பல்வேறு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

 What is the Prediction for four poll-bound States by Congress MP Rahul Gandhi

இந்த சட்டசபைத் தேர்தலில் பெறும் வெற்றி என்பது நிச்சயம் லோக்சபா தேர்தலுக்கு எந்தவொரு கட்சிக்கும் பூஸ்டாக இருக்கும். கடந்த முறை இந்த மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் முடிவுகள் மிகவும் நெருக்கமாகவே இருந்தது.

தேர்தல்: இதனால் இந்த முறை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பலரும் ஆர்வமாகவே எதிர்பார்க்கிறார்கள். இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சியே இப்போது இருக்கிறது. மத்தியப் பிரதேசத்திலும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த போதிலும், சிந்தியா கலகம் செய்ததால் பாஜக அங்கு ஆட்சியை அமைத்தது.

மறுபுறம் பாஜகவும் இந்த 5 மாநில தேர்தல்களைக் கருத்தில் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தான் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் மாற்றப்பட்டன. அடுத்தாண்டு லோக்சபா தேர்தலின் அரையிறுதியாக இது பார்க்கப்படும் நிலையில், இந்தத் தேர்தல்களை பாஜக சீரியசாகவே எடுத்துக் கொள்கிறது. இதன் காரணமாகவே முக்கிய நிர்வாகிகளை பாஜக களத்தில் இறங்கியுள்ளது.

காங்கிரஸ்: பாஜகவைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அதிக உற்சாகத்தில் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகள், தலைவர்களுக்கும் கூட புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே வரும் காலத்தில் நடக்கும் தேர்தல்களில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்று அக்கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள லடாக் கார்கில் பகுதியில் ராகுல் காந்தி இப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே ராகுல் காந்தி பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்.

ராகுல் காந்தி: அங்கே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்... காங்கிரஸ் ஒரு கட்சி மட்டுமல்ல, அது ஒரு சித்தாந்தம். நாட்டில் இப்போது வெறுப்பைச் சிலர் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள். அந்த வெறுப்பிற்கு அன்பு மட்டுமே ஒரே தீர்வு. அந்த அன்பைத் தரும் காங்கிரஸ் கட்சிக்கே மக்கள் ஆதரவு தருவார்கள்" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது முதல் முறையாக ராகுல் காந்தி அங்கே சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை ராகுல் காந்தி லேயிலிருந்து பாங்காங் ஏரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார், மறுநாள் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ராகுல் காந்தி அங்கேயே கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+