பாகிஸ்தானில் டிரம்ப் செய்யும் டாப் பிஸ்னஸ்.. இந்தியாவை துச்சமென தூக்கி வீச.. இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது குடும்ப வணிக நலன்களுக்காக, பாகிஸ்தானுடன் பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்பதற்காக அந்த நாட்டிற்கு சாதகமாக செயல்படுகிறார். பாகிஸ்தானுடன் உறவுகளை வளர்த்து, இந்தியாவுடனான பிணைப்பை பலவீனப்படுத்திவிட்டார் என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள தனது குடும்ப பிஸ்னஸ்கள் வளர வேண்டும் என்பதற்காக இந்தியாவை டிரம்ப் பகைத்துக்கொள்கிறார். பல ஆண்டுகளாக அமெரிக்கா இருதரப்பு அடிப்படையில் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த உழைத்து வருகிறது. தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சீனாவிற்கு எதிரான வியூகங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் முக்கியமானது. ஆனால் அதை எல்லாம் டிரம்ப் உடைத்து நொறுக்கி வருகிறார்.

Donald Trump India

பாகிஸ்தான் - இந்தியா-அமெரிக்கா உறவு

இந்தியா-அமெரிக்கா உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானுடனான டிரம்ப் குடும்பத்தின் வணிக ஒப்பந்தங்களுக்காக இந்தியா உடனான உறவை டிரம்ப் புறக்கணித்ததுள்ளது. இது தவறான முடிவு. இது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது. மேலும், இந்தச் செயல் ஜெர்மனி, ஜப்பான், கனடா போன்ற பிற நாடுகளுக்கு அமெரிக்காவை நம்புவது குறித்த சந்தேகத்தை உருவாக்கும். இது அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய சூழலை வலுப்படுத்தும், நீண்ட கால அடிப்படையில் அமெரிக்காவின் நண்பர்கள் தங்கள் நம்பகத்தன்மையைக் இழக்கும் நிலை ஏற்படும். இது அமெரிக்க மக்களுக்கு நல்லதல்ல, என்று சல்லிவன் எச்சரித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின.

இந்த பாராட்டு, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' (TRF) அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. லஷ்கர்-இ-தைபாவின் கிளையான TRF அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (FTO) மற்றும் குறிப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி (SDGT) என அமெரிக்கா அறிவித்தது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புச் செயலாளர் நபீல் முனிர் தலைமை தாங்கினார். அமெரிக்கா சார்பில் பயங்கரவாத எதிர்ப்புக்கான மாநிலத் துறையின் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி டி லோகெர்ஃபோ இணைத் தலைமை தாங்கினார்.

அமெரிக்கா பாகிஸ்தான் உறவில் டிரம்ப் ஆட்சியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் சந்திப்புக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் ஆதரவு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட நேற்று இரவோடு இரவாக டிரம்ப் இந்தியாவின் முதுகில் குத்தி இருக்கிறார்.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை (BLA) ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பிஎல்ஏ எனப்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் குறிப்பாக ராணுவத்தை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால், இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது முனிரின் அமெரிக்க பயணத்தின்போது என்பது குறிப்பிடத்தக்கது.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்

அசிம் முனிரின் அமெரிக்கப் பயணத்தின்போது, பிஎல்ஏ பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது அவருக்கு ஒரு ராஜதந்திர வெற்றியாகக் கருதப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குள் இது முனிரின் இரண்டாவது அமெரிக்கப் பயணம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பலுசிஸ்தான் விடுதலைக் குழுவை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததன் மூலம், பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+