உருவானது AI வக்கீல்.. பார்த்ததும் தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்ட கேள்வி! என்ன பதில் வந்தது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பகத்தில் ஏஐ வழக்கறிஞர் இருக்கிறது. இந்த ஏஐ வழக்கறிஞருடன் இன்று தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கலந்துரையாடினார். அப்போது மரண தண்டனை குறித்து நீதிபதி டி ஒய் சந்திரசூட் கேள்வி கேட்க, அதற்கு அந்த ஏஐ வழக்கறிஞர் கொடுத்த பதில் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது உலகில் எங்குப் பார்த்தாலும் ஏஐ தான்.. நாம் யோசித்துக் கூட பார்க்காத பல துறைகளில் இப்போது ஏஐ ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படி தான் ஏஐ வழக்கறிஞர் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

supreme court dy chandrachud

தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகத்தின் திறப்பு விழா இன்று நடந்த நிலையில், அதில் பங்கேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த ஏஐ வழக்கறிஞர் உடன் கலந்துரையாடினார்.

தலைமை நீதிபதி: நமது நாட்டின் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், தனது நீதிமன்றத்தில் எப்போதும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இதற்காகப் பல முறை அவர் வழக்கறிஞர்களைக் கண்டித்து இருக்கிறார். அவர் இன்று ஏஐ வழக்கறிஞருடன் கலந்துரையாடினார்.

கேள்வியும் பதிலும்: இந்த ஏஐ வழக்கறிஞரின் அறிவை சோதிக்க விரும்பிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த ஏஐ வழக்கறிஞர், "ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. ஆனால், அரிதான வழக்குகளுக்கு மட்டும் இந்த தண்டனை வழங்கப்படுகிறது.. மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு மட்டும் அத்தகைய தண்டனை விதிக்கப்படுகிறது" என்று பதிலளித்தது.

பார்க்க அப்படியே வழக்கறிஞர் போலக் கண்ணாடி, வழக்கறிஞர் அணியும் ஆடையுடன் இருந்த ஏஐ வழக்கறிஞர், சரியான பதிலை அளித்துள்ளது என்பதைப் போலவே தலைமை நீதிபதி சந்திரசூட்டின் ரியாக்ஷன் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அடுத்த தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட அனைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.

சந்திரசூட் பேச்சு: முன்னதாக நீதித்துறை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துப் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த புதிய அருங்காட்சியகம் உச்ச நீதிமன்றத்தின் சிறப்புகளையும் தேசத்திற்கான அதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த அருங்காட்சியகம் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் இடமாக மாற வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து குழந்தைகள், நீதித்துறைக்குத் தொடர்பு இல்லாதவர்கள் இங்கு வந்து நீதிமன்றத்தின் செயல்முறைகள், நீதித்துறையின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அருங்காட்சியகம் நீதிபதிகள் பற்றியது மட்டும் இல்லை.. அரசியலமைப்பு குறித்தும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் குறித்தும், நீதிமன்றம் இந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்த பார் உறுப்பினர்கள் குறித்தும் இந்த அருங்காட்சியகத்தில் பல விஷயங்கள் இருக்கிறது.. இது மக்கள் ஆர்வமாக வந்து சுற்றிப் பார்க்கும் இடமாக இருக்கும். பார் உறுப்பினர்கள் முதலில் இந்த இடத்தை பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+