குஜராத் இல்லை.. மத்திய பிரதேசம்தான் பாஜக கோட்டை.. சவுகான் மீண்டும் வெல்வது எப்படி? இதுதான் சீக்ரெட்
சென்னை: குஜராத்தை பாஜகவின் கோட்டை என்று பலரும் கூறுவது உண்டு. அங்கே வரிசையாக 3 முறை மோடி முதல்வராக இருந்தது.. அதன்பின்பும் பாஜக ஆட்சியே தொடருவது ஆகியவை இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய பிரதேசமும் பாஜகவின் கோட்டைதான் என்று நிரூபணம் ஆகி உள்ளது.
குஜராத் மட்டுமல்ல மத்திய பிரதேசமும் எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம் என்பதை பாஜக நிரூபணம் செய்துள்ளது. மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம்.
மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்து மீண்டும் இடைத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு பாஜக வந்தது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.
( இந்த கையை தூக்குவதற்கு பதில்.. அந்த கையை தூக்கிய ராகுல்.. சின்ன தவறால்.. ம.பியில் காலி ஆன காங்கிரஸ்?)
முன்னிலை பாஜக: இப்போது 5வது முறையாக பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கே 230 இடங்களில் பாஜக 144 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 82 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும்.

வரிசையாக 5 தேர்தல்களில் பாஜக ஆதிக்கம் செலுத்த காரணம்;
1. பாஜகவிற்கு என்று அங்கே வலுவான வாக்கு வங்கி உள்ளது. பிராமணர்கள் வாக்கு, இடைநிலை ஆதிக்க சாதி வாக்கு வங்கி வலிமையாக உள்ளது.
2. தலித் வாக்குகளும் அங்கே கணிசமாக இருந்தாலும், திவாரி, சவுகான், ராஜ்புட் பட்டைப்பெயர்கள் கொண்ட ஜாதிகள் அதிகம் உள்ளன. இந்த ஜாதிகள் பெரும்பாலும் பாஜக சப்போர்ட்தான்.
3. உலகக் கோப்பையை வெல்ல நல்ல டீம் இருந்தாலும்.. தோனி போல கேப்டன் வேண்டும். அப்படித்தான் காங்கிரஸ் அங்கே வலுவாக இருந்தாலும் நல்ல தலைவர் இல்லை.
4. காங்கிரசில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியது கமல் நாத்திற்கு பெரிய சிக்கல் ஆனது. அங்கே சிந்தியா போன்ற போன்ற தலைவர்கள் இல்லாமல் போனது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. அரசியல் ரீதியாக கமல்நாத் பெரிய தலைவர்தான். ஆனால் அவரிடம் ஒரு வசீகரம் இல்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு என்று வலுவான மாநில முகம் கிடையாது. அங்கே மாநில ரீதியாக வலுவாக காங்கிரசை தூக்கி நிறுத்தும் முகம் கிடையாது.
5. அங்கே பாஜகவின் மிகப்பெரிய முகம் சிவராஜ் சிங் சவுகான் . அவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு குஜராத்தில் மோடிக்கு இருக்கும் ஆதரவிற்கு இணையானது.
6. தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா போல ஸ்டேட்ஸ்மேன் இமேஜ் கொண்ட தலைவர்தான் சவுகான். அவரை எதிர்க்க கமல்நாத்களால் முடியாது. டிகே சிவக்குமார், சித்தராமையா போன்ற தலைவர்கள் காங்கிரசுக்கு தேவை. அப்படி யாரும் காங்கிரசுக்கு அங்கே இல்லை என்பதே சோகம்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications