இந்த கையை தூக்குவதற்கு பதில்.. அந்த கையை தூக்கிய ராகுல்.. சின்ன தவறால்.. ம.பியில் காலி ஆன காங்கிரஸ்?
போபால்: மத்திய பிரதேசத்தில் அரசியல் எதிர்காலத்தை கணிக்காமல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2018ல் எடுத்த முடிவு ஒன்று.. அக்கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது.
ஒரு அரசியல் முடிவு.. ஒரு சின்ன தேர்வு ஒரு கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கலாம். அப்படித்தான் ராகுல் காந்தி 2018ல் ஒரு முடிவு எடுத்தார். 2018ல் மத்திய பிரதேசத்தில் நடத்த தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களை வென்றது.
மெஜாரிட்டி பெற 116 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் உதவியோடு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால் யார் முதல்வர் என்ற விவாதம் கிட்டத்தட்ட ஒரு வாரம் நடந்தது.
முதல்வருக்கு போட்டி: ஜோதிராதித்ய சிந்தியா - கமல்நாத் இடையே கடும் போட்டி இருந்தது. பெருவாரியான மக்கள் கிரேஸ் சிந்தியாவிற்கு இருந்தது. இளைஞர்... மன்னர் பரம்பரை.. எதிர்காலம் என்றெல்லாம் அவருக்கு ஆதரவு இருந்தது.
ஆனால் மூத்தவர் கமல்நாத்திற்கு கட்சி ரீதியாக எம்எல்ஏக்கள் ஆதரவு மெஜாரிட்டி இருந்தது. கிட்டத்தட்ட 85 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். இதனால் வேறு வழியின்றி.. இரண்டு பேரில் யாரின் கையை தூக்க வேண்டும் என்ற நிலை வந்த போது.. ராகுல் காந்தி கமல்நாத் கையை தூக்கினார்.

ஆனால் தன்னுடைய எம்எல்ஏங்களையே கட்டுப்படுத்த தெரியாத கமல்நாத் ஆட்சி கவிழ காரணமாக இருந்தார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.
சிந்தியா இல்லை; அங்கே சிந்தியா போன்ற போன்ற தலைவர்கள் இல்லாமல் போனது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. அரசியல் ரீதியாக கமல்நாத் பெரிய தலைவர்தான். ஆனால் அவரிடம் ஒரு வசீகரம் இல்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு என்று வலுவான மாநில முகம் கிடையாது. அங்கே மாநில ரீதியாக வலுவாக காங்கிரசை தூக்கி நிறுத்தும் முகம் கிடையாது.
வாக்குகள் எண்ணிக்கை: அதுதான் தற்போது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்து உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 230 இடங்களில் 101 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 81 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக அங்கே மெஜாரிட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
மத்திய பிரதேச ஆட்சி வரலாறு: மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம்.
மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications