பார்த்ததும் குழப்பம்.. இந்த மாய புகைப்படத்தை பாருங்களேன்.. உங்க கேரக்டரை ஈஸியா சொல்லிட முடியும்!
புதுடெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒளி மாயை படத்தை பார்த்ததும் உங்கள் பார்வைக்கு முதலில் என்ன தெரிகிறதோ அதை வைத்து உங்கள் பெர்சானலிட்டியை (தனித்த குண நலன்கள்) மதிப்பிடும் ஒரு ஜாலியான முயற்சியே இது.
பொதுவாக பேஸ்புக், வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மக்களின் செயல்பாடுகாடுகள் அதிகரித்ததில் இருந்து, எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்டிங் ஆகி நெட்டிசன்களுக்கு தீனி போட்டு கொண்டுதான் இருக்கும்.
அதிலும் உலகில் எந்த இடத்திலோ ஏற்பட்ட சில விஷயங்கள் கூட நமது உள்ளங்கைகளுக்கு சில வினாடிகளில் வந்துவிடுகிறது. அந்த விஷயமும் மிக சுவாரசியமானதாக இருந்தால் சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள் அதனை டிரெண்ட் செய்து விடுகின்றனர்.

டிரெண்டிங் வீடியோக்கள்
அந்த வகையில் உலகத்தில் உள்ள நெட்டிசன்களுக்கு ஏதாவது வித்தியாசமான வீடியோக்கள், மனித நேயமிக்க செயல்கள் மட்டும் அல்லாது மூளைக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையிலான சில புதிர்களுக்கும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதில் ஒருசிலர் நமது புத்திசாலித் தனத்தை எப்படியாவது முதல் ஆளாக நிரூபித்து காட்டிவிட வேண்டும் என புதிர்கள், இல்லூஷன் என சொல்லப்படும் ஒளி மாயைய்கள் உள்ளிட்ட பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

சற்று வித்தியாசமானது
இந்த ஒளி மாயை சவால் உங்கள் பெர்சானலிட்டியை வெளிப்படுத்துகிறது. இந்த ஒளி மாயை சவாலில் நீங்கள் தோற்கவோ வெற்றி பெறவோ போவது இல்லை. ஆனால், உங்களை பற்றி நீங்களே அறிந்து கொள்ளும் முயற்சியே இது.. வழக்கமாக ஒளி மாயை படங்கள் என்றால் வரைபடங்களாகவே பெரும்பாலும் இருக்கும். ஆனால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒளி மாயை படம் சற்று வித்தியாசமானது. இது நீர்வாழ் உயிரினங்களின் உண்மையான படம். இந்த படத்தில், ரம்மியமாக காட்சி தரும் நீல கடல் நீரில் ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் மீன்கள் உலவுவதை காணலாம். தற்போது படத்தை உற்று பாருங்கள். மீன், கடல் நீர், ஸ்கூபா டைவர்களையும் தாண்டி கவனியுங்கள். உங்களுக்கு என்ன தெரிகிறது? மறைந்து இருக்கும் இரண்டு கூறுகள் உங்களுக்கு தெரிகிறதா? ஆமாம், இதில் இரண்டு விஷயங்கள் மறைந்து உள்ளன.

முதலில் என்ன தெரிகிறது?
அதை உங்களுக்கு சற்று எளிதாக்குகிறோம் வாருங்கள்.. இரண்டு முகங்கள் அதில் தெரிகிறதா? ஒன்று மனிதன் முகத்தை போலவும், மற்றொன்று மீன் மற்றும் ஸ்கூபா டைவர்களின் கூட்டங்களாக உள்ளதை உங்களால் பார்க்க முடிகிறது அல்லவா. இந்த இரண்டில் முதலில் உங்கள் பார்வைக்கு பட்டது என்ன? உங்கள் பார்வைக்கு முதலில் ஸ்கூபா டைவர்களும், மீன் கூட்டங்களும் தென்பட்டது என்றால், முதல் அபிப்ராயத்தையே நீங்கள் கடைசி வரை நம்புபவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையில் முடிவுகளை வேகமாக எடுக்க முயற்சிப்பீர்கள். தீவிரமாக அலசி ஆராய்வதிலோ, அதிகமாக அதையே சிந்தித்து கொண்டிருப்பதிலோ உங்களுக்கு நம்பிக்கை இருக்காது. உங்களுடைய இந்த பண்பு சில சமயங்களில் உங்களுக்குப் பிரச்சினைகளையும் உருவாக்கக் கூடும்.

அலசி ஆராய்வீர்கள்
இரண்டு முகங்கள் உங்கள் பார்வைக்கு முதலில் தென்பட்டது என்றால், மற்றவர்களிடம் இருந்து நீங்கள் சற்று வித்தியாசம் ஆனவர்களாகவே இருப்பீர்கள். வாழ்வின் பிற அம்சங்கள் மற்றும் பிரச்சினைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த முயற்சிப்பீர்கள். தொலைநோக்கு சிந்தனை உடையவராக இருக்கும் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்த பின்னர்தான் முடிவுகளை எடுப்பர்.












Click it and Unblock the Notifications