டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்! மீண்டும் செயல்பட தொடங்கியது! என்ன நடந்தது? மெட்டா சொல்வது என்ன

Google Oneindia Tamil News

டெல்லி: வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக முடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக அதன் தாய் நிறுவனமான மெட்டா விளக்கம் அளித்து உள்ளது.

உலகெங்கும் அதிக பேர் பயன்படுத்தும் முக்கிய மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ஒரு நேரத்தில் பல கோடி பேர் எப்போதும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவார்கள்.

வாட்ஸ்அப் செயலி சமீப காலங்களாகவே பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதற்குப் பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

 திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! திணறிப் போன மக்கள்! உலகம் முழுவதும் இதே நிலைமையா? என்னாச்சு தெரியுமா? திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! திணறிப் போன மக்கள்! உலகம் முழுவதும் இதே நிலைமையா? என்னாச்சு தெரியுமா?

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

இதனிடையே இன்று வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு வாட்ஸ்அப் சேவை முடங்கி உள்ளது. இந்த நேரத்தில் யாராலும் மெசேஞ் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்று கூறப்பட்டது. இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ்அப் சேவை இப்படி முற்றிலுமாக முடங்கி இருந்தது.

 வேலை செய்யவில்லை

வேலை செய்யவில்லை

இந்த காலகட்டத்தில் சுமார் 69% பேர் தங்களால் வாட்ஸ்அப்பில் எந்தவொரு மெசேஞ்சையும் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். மேலும், சிலர் வாட்அஸ் செயலி சர்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று எரர் காட்டுவதாகக் கூறினர். இன்னும் சிலர் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தாலே அது ஒட்டுமொத்தமாக கிரேஷ் ஆகிவிடுவதாகக் கூறினர்.

சேவை முடங்கியது

சேவை முடங்கியது

இந்தியா மட்டுமின்றி இத்தாலி, துருக்கி என பல்வேறு நாடுகளிலும் இதே பிரச்சினை ஏற்பட்டது. வாட்ஸ்அப் சேவை முடங்கியது என்று இதுவரை மெட்டா நிறுவனம் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. இத்தனை ஆண்டுகளில் வாட்ஸ்அப் சேவை இத்தனை நேரம் முடங்கியது இதுவே முதல்முறையாகும். இதனிடையே வாட்ஸ்அப் சேவை இப்போது மெல்ல மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.

விளக்கம்

விளக்கம்

முன்னதாக வாட்அஸ்ப் சேவை முடங்கி இருந்த போது, இது குறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்து இருந்தது. இது குறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்த பிரச்சினை குறித்து எங்களுக்குத் தெரியும். தற்போது சிலர் மெசேஞ் அனுப்புவதில் சிக்கலை எதிர்கொள்வதை நாங்கள் அறிவோம்.. இந்த பிரச்சினையைச் சரி செய்யும் முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு உள்ளனர். மிக விரைவாக அனைவருக்கும் வாட்ஸ்அப் செயலியை மீட்டுத் தர பணியாற்றி வருகிறோம்" என்று கூறி இருந்தார்.

பிரச்சினை

பிரச்சினை

இந்தச் சூழலில் தான் இப்போது வாட்ஸ்அப் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது இருந்த போதிலும், இன்னும் வாட்ஸ்அப் சேவை முழுமையாக சீராகவில்லை. இன்னும் சிலருக்கு ஏரர் காட்டிக் கொண்டே தான் இருக்கிறது. அதேபோல வாட்ஸ்அப் வேலை செய்ய தொடங்கியவர்களுக்கு்ம கூட சிறு சிறு தொழில்நுட்ப பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர.

மெட்டா

மெட்டா

வாட்ஸ்அப் செயலி மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் இயங்குகிறது. வாட்ஸ்அப் தவிர மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களும் இயங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலி மட்டுமே கடந்த இரண்டு மணி நேரமாக முடங்கி உள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் வழக்கம் போலவே இயங்கி வந்தது.

English summary
Meta doesn't explains the Reason behind whatsapp down: Meta about whatsapp down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X