பாஜக 'தலைவர்' அத்வானிக்கே 'முதியோர் குழு'தான் கதி-வசுந்தர ராஜே, சவுகான், ரமண் சிங் எதிர்காலம் அம்போ?
டெல்லி: பாஜகவில் அடுத்த 'முதியோர் குழு'வை அக்கட்சி டெல்லி மேலிடம் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்புதிய முதியோர் குழுவில் மாஜி முதல்வர்களான வசுந்தர ராஜே சிந்தியா, சிவராஜ் சிங் சவுகான், ரமண் சிங் ஆகியோர் தள்ளிவிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவின் நிறுவனத் தலைவர்களாக அக்கட்சியின் முகமாக இருந்தவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானி. பாஜக இன்று அசைக்க முடியாத ஆலமரமாக வேர்பிடித்து நிற்பதில் அத்வானியின் ரத யாத்திரைகள் ஆகப் பெரும் பங்களிப்பை செய்தன. 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து பிரதமராக மோடி பதவியேற்றார். பாஜக எனும் கட்சி மோடி- அமித்ஷா கைகளுக்குப் போனது. அவ்வளவு பெரிய நிறுவனத் தலைவரான அத்வானி முற்று முழுதாக ஓரம் கட்டப்பட்டு அக்கட்சியின் முதியோர் குழு உறுப்பினராக்கப்பட்டார்.

ஓரம் கட்டப்பட்ட சீனியர்கள்: அன்று தொடங்கியது பாஜகவில் சீனியர்களை ஓரம் கட்டுகிற படலம்.. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி தொடங்கி எடியூரப்பா என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது இந்த ஓரம் கட்டப்பட்டு முதியோர் குழுவில் சேர்க்கப்படும் பட்டியலில் புதியதாக 3 சீனியர்கள் இணையப் போகின்றனர் என்பதையே பாஜகவின் மாநில முதல்வர்கள் தேர்வு வெட்ட வெளிச்சமாக தெரிவித்துவிட்டது.
ஏமாற்றத்தில் பெருந்தலைகள்: ராஜஸ்தானில் மகாராணி வசுந்தர ராஜே சிந்தியா, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கரில் ரமண் சிங் என அம்மாநிலங்களின் பாஜக முகங்கள்தான் முதல்வர் பதவியை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பாஜக மேலிடமோ யாருமே எதிர்பார்க்காத அல்லது யூகிக்காத வகையில் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். உத்தரவின் பேரில் சத்தீஸ்கரில் பழங்குடி இனத்தவரையும் ம.பி.யில் ஓபிசி இனத்தவரையும் ராஜஸ்தானில் பிராமணர் ஒருவரைய்ம் முதல்வராக்கிவிட்டது.
முதியோர் குழுவா?: ராஜஸ்தான், ம.பி. மாநிலங்களைப் பொறுத்தவரை சட்டசபை தேர்தலுக்கு முன்னரே வசுந்தர ராஜே சிந்தியாவும் சிவராஜ்சிங் சவுகானும் ஓரம்கட்டப்பட்டுவிட்டனர். ஆனால் இருவரும் ஓரம் கட்டப்பட்டால் ஒரேயடியாக பாஜக ஒழிந்து போய்விடும் என கருத்து கணிப்புகள் எச்சரிக்க திடீரென இருவருக்கும் முக்கியத்துவம் கிடைத்தது. இதனால் தேர்தலிலும் பாஜக வெற்றியை அறுவடை செய்தது. ஆனால் இந்த தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னர் மீண்டும் இந்த சீனியர்களை தூக்கி ஓரமாக வீசிவிட்டது டெல்லி பாஜக மேலிடம். இதே கதிதான் சத்தீஸ்கர் ரமண் சிங்குக்கும். ஆனாலும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவோம், கொஞ்சம் பொறுங்க.. முக்கிய பொறுப்பு தரப்படும் என்கிறார். அந்த பொறுப்பு முதியோர் குழுதானே என நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications