Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழர்கள் உங்களை போய் டெல்லி அனுப்பினார்களே!" காங். எம்பி கேள்வி! நிர்மலா சீதாராமனுக்கு வந்ததே கோபம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் குஜராத் முதல்வராக மோடி இருந்த போது பேசியதைக் குறிப்பிட்டு, "இவரை ஏன் தமிழக மக்கள் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை" என்று காங்கிரஸ் எம்பி நிர்மலா சீதாராமனை பார்த்துக் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல முக்கிய மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல எதிரக்கட்சிகளும் முக்கிய பிரச்சினைகள் அங்கு எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே நமது நாட்டின் ரூபாய் மதிப்பு சரிந்து வருவது குறித்தும் இதைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நிர்மலா சீதாராமன் சற்று காட்டமாகவே பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸ் எம்பி கேள்வி

காங்கிரஸ் எம்பி கேள்வி


தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி அனுமுலா ரேவந்த் ரெட்டி இந்திய ரூபாய் மதிப்பு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில் அவர், "இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. குறிப்பாக முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 ரூபாய் எட்டியுள்ளது. அதை மத்திய அரசு கவனிக்கவில்லையா? இந்த சரிவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 2013இல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்த போது, அப்போதைய குஜராத் முதல்வரும் தற்போதைய பிரதமருமான மோடி அப்போது ரூபாய் மதிப்பு சரிந்தது குறித்து என்ன கேட்டாரோ அதையே கேட்கிறேன்" என்று கூறி, அப்போது மோடி விமர்சித்துச் பேசியதை குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

2013ஆம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு மோசமாகச் சரிந்தது. அப்போது அதிகபட்சமாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 ரூபாய் வரை சென்றது. இதை பாஜக தலைவர்கள் கடுமையாகச் சாடியிருந்தார். அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, "இன்று ரூபாய் ஐசியுவில் உள்ளது. இவரை ஏன் தமிழ் மக்கள் டெல்லிக்கு அனுப்பினார்கள் என்று தெரியவில்லை" என்று அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தைக் கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் செய்திருந்தார். இதையே அவர் காங்கிரஸ் எம்பி காங்கிரஸ் எம்பி அனுமுலா ரேவந்த் ரெட்டி நாடாளுமன்றத்தில் மீண்டும் குறிப்பிட்டுக் கேட்டார்.

ஜோக் இல்லை

ஜோக் இல்லை

இதற்கிடையே காங்கிரஸ் எம்பி அனுமுலா ரேவந்த் ரெட்டி கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று காட்டமாகவே பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில், "இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அதில் சிக்கல் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும், ஆனால் சிலர் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள்.

பொறாமை

பொறாமை

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து எதிர்க்கட்சியினர் பொறாமை அடைகின்றனர். உலகில் இறுக்கும் அனைத்து நாணயத்துக்கும் எதிராக இந்திய ரூபாய் வலுவாகவே உள்ளது. டாலர்-ரூபாய் ஏற்ற இறக்கம் அதிகமாகப் போகாமல் இருக்கச் சந்தையில் தலையிட்டு, அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு தடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் பதிலளித்தார்.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 35 காசுகள் சரிந்து 82.63 வரை சென்றது. அமெரிக்காவில் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால், இங்குள்ள இந்திய நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக விற்று வருகின்றனர். இது சந்தையில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. ரூபாய் மதிப்பு குறையும் போதிலும், இந்தியப் பங்குச்சந்தை பெரியளவில் சரிவடையவில்லை. இப்போதும் கூட மும்பை பங்குச்சந்தை சென்சஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல்தான் வர்த்தகமாகி வருகிறது. ஆனால், வரும் காலத்திலும் இது தொடர வாய்ப்புகள் குறைவு என்றே பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+