செங்கோல் நிறுவும் அந்த லாஸ்ட் மினிட்! சட்டென யோசித்த மோடி.. எல்லோரும் வியந்து பார்க்க.. நடந்தது என்ன
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவும் முன் ஒரு நொடி யோசித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் இன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. நேற்று நடந்த நிகழ்வில் பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைத்தனர் ஆதீனங்கள்.

இதையடுத்து தமிழ்நாட்டு ஆதீனங்கள் புடைசூழ, திருமறை முழங்க செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கொண்டு சென்றார் பிரதமர் மோடி. அதன்பின் தமிழ்நாட்டு செங்கோல் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி .
பூஜைக்கு பின் புதிய நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 1947-ம் ஆண்டு செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. செங்கோல் நிறுவிய பின்னர் தமிழ்நாட்டு ஆதீனங்களிடம் தலைவணங்கி ஆசீர்வாதம் பெற்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி இன்று மிகவும் பக்திமயமாகவும் காணப்பட்டார்.
அதன்பின் புதிய நாடாளுமன்றத்தில் கல்வெட்டுகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அதோடு புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணியாளர்களை சிறப்பித்தார் பிரதமர் மோடி. இதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் சர்வ மதத் தலைவர்கள் பிரார்த்தனை நடைபெற்றது.
நிறைவு பெற்ற திறப்பு விழா:
டெல்லியில் ரூ. 21,000 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் கூடிய செயலகமான சென்ட்ரல் விஸ்டா திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வு தொடங்கி சற்று முன் நடந்து முடிந்தது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் நிறுவப்பட்டது.

யோசித்த மோடி:
இந்த திறப்பு விழாவில் செங்கோல் நிறுவும் இறுதி நொடியில் பிரதமருக்கு சட்டென யோசனை தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நொடி சட்டென அவர் யோசித்தார். செங்கோலை நிறுவும் கடைசி நொடி அப்படியே அமைதியாக ஒரு நொடி நின்றார்.
மோடி ஏன் இப்படி நிற்கிறார் என்று எல்லோரும் அவரை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தனர். அந்த நேரம்தான் திடீரென பிரதமர் மோடி சபாநாயகர் ஓம் பிர்லாவை அருகே வரும்படி அழைத்தார். செங்கோல் நிறுவும் இடத்தில் தான் மட்டும் இருக்க கூடாது.. சபாநாயகருக்கும் இடம் வேண்டும்.. அவரும் இருக்க வேண்டும் என்று யோசித்து பிரதமர் மோடி.. ஓம் பிர்லாவை அருகே அழைத்தார்.
இதையடுத்து அவர் அருகே வந்து நின்ற பின் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வு தொடங்கி சற்று முன் நடந்து முடிந்தது
மேலும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்றனர். 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணித்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உரைகள் வாசிக்கப்படும்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications