மணிக்கு 200 கிமீ வேகம்! அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம்! தீப்பற்றி எரிந்த டேங்கர் லாரி! என்ன நடந்தது
டெல்லி: டெல்லி-மும்பை-பரோடா எக்ஸ்பிரஸ் சாலையில் 200 கிமீ வேகத்தில் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று ஆயில் டேங்கரில் மோதி மிக மோசமான விபத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொகுசு கார்களை வைத்துக் கொண்டு சாலைகளில் அதிவேகமாக கார்களை இயக்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இதனால் மிக மோசமான விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இப்படிதான் அதிகாலை நேரத்தில் நடந்த ஒரு சொகுசு கார் விபத்தில் சிக்கினார். இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையே இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே அதுபோன்ற ஒரு மோசமான விபத்து இப்போது அரங்கேறியுள்ளது.
கார் விபத்து: டெல்லி-மும்பை-பரோடா எக்ஸ்பிரஸ் சாலையில் எண்ணெய் டேங்கர் மீது எதிர்பாராத விதமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் டேங்கரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். மேலும், ரோல்ஸ் ராய்ஸில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது விபத்தில் சிக்கிய இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் 14 கார்களை கொண்ட கான்வாயின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அந்த 14 கார்களும் எக்ஸ்பிரஸ் சாலையில் அதிவேகமாகப் பயணித்த நிலையில், அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் எதிரே இருந்த வானகத்தை முந்தி செல்ல முயன்ற நிலையில், அப்போது யு-டர்ன் எடுத்துக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது சொகுசு கார் மோதியுள்ளது.
என்ன நடந்தது: முதற்கட்ட விசாரணையில் இதில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒட்டுநர் மீதே தவறு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் உள்ள பிரபல குபேர் குழுமத்தின் இயக்குநர் விஜய் மாலு என்பவரும் விபத்தில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்துள்ளார். அவர் இந்த விபத்தில் காயமடைந்த நிலையில், குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "ரோல்ஸ் ராய்ஸ் ஓட்டுநரின் தவறால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். எக்ஸ்பிரஸ் சாலையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை நாங்கள் இப்போது கைப்பற்றியுள்ளோம். மொத்தம் 14 கார்கள் ஒன்றாகச் சென்றுள்ளன.. அந்த 14 வாகனங்களையும் அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளோம். இது தொடர்பாக கார் உரிமையாளர்களுக்கு நோட்டீஸும் அனுப்பி வருகிறோம்" என்றார்
200 கிமீ வேகம்: விபத்தில் சிக்கிய அந்த சொகுசு கார் 200 கிமீ வேகத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரி தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் சாலையில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம்120 கி.மீ தான். இருந்த போதிலும் விதிகளை மதிக்காமல் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டுநர் வாகனத்தை 200 கிமீ வேகத்தில் இயக்கியுள்ளார். அது டேங்கருடன் மோதி மோசமான விபத்து ஏற்பட இதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது.
விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரில், "டேங்கரை ராம்பிரித் என்பவர் ஓட்டினார்.. அதில் குல்தீப் மற்றும் கோதம் குமார் என இருவர் உடன் இருந்தனர்.. காலை 11.30 மணியளவில், டெல்லி-மும்பை நெடுஞ்சாலையில், கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் சென்ற சொகுசு கார் டேங்கரின் முன்பக்க டயரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
டேங்கர் வெடிக்கும் முன்பே 3 பேரும் அதில் இருந்து வெளியே குதித்து விட்டனர். இருப்பினும், இதில் படுகாயமடைந்த ராம்பிரித் மற்றும் குல்தீப் மருத்துவமனையில் உயிரிழந்தனர். கவனக்குறைவாகவும், வேகமாகவும் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications