போச்சே.. பதவி பறிப்பால் ராகுல் காந்திக்கு இவ்வளவு இழப்பா? என்னென்ன சலுகைகள் "கட்" தெரியுமா? லிஸ்ட்
டெல்லி: ராகுல் காந்தி லோக்சபா எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள பங்களாவை ஒரு மாதத்துக்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி தனது தகுதிநீக்கத்தால் இன்னும் பல சலுகைகளை இழக்கிறார். மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் முதல் பெட்ரோலுக்கு வழங்கப்பட்ட ரூ.16 அலோவன்ஸ் வரை ஏராளமான சலுகைகளை பறிகொடுக்கிறார். அவர் இழக்கும் சலுகைகள் என்னென்ன? என்பது பற்றிய முழுதகவல் தற்போது வெளியாகி உள்ளது.
‛மோடி' பெயர் குறித்த கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருடர்களாக இருப்பவர்களின் பெயர்கள் எல்லாம் ஏன மோடி என முடிகிறது? என ராகுல் காந்தி கேட்ட கேள்வி தான் இந்த சர்ச்சைக்கு காரணமாகும்.
இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி இந்த வழக்கை தொடர்ந்தார். 4 ஆண்டு விசாரணையை தொடர்ந்து ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

தகுதி நீக்கம்
இந்த தண்டனையை தொடர்ந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவில் எம்பி, எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யலாம். அதன் அடிப்படையில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து நாடாளுமன்ற மக்களவையின் செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

காங்கிரஸ் போராட்டம்
தண்டனை விதித்த நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அவகாசம் வழங்கி தண்டனையை 30 நாள் நிறுத்தி வைத்த நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அதைத்தொடர்ந்து இன்று எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு கருப்பு நிற ஆடைகள் அணிந்து சென்றனர்.

ராகுல் காந்தி இழக்கும் சலுகைகள்
இந்நிலையில் தான் டெல்லியில் ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ஒரு மாதத்துக்கு பிறகு காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சலுகைகள் என்னென்ன? தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் இழக்கும் சலுகைகள்? பற்றிய விபரங்களை தேட தொடங்கி உள்ளனர். அதற்கு விடையாக தான் இந்த செய்தி இருக்கும். தற்போது ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் இழக்கும் சலுகைகளின் விபரம் வருமாறு:

மாத சம்பளம் இழப்பு
இந்தியாவில் எம்பியாக இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. 2010 வரை எம்பிக்களின் மாதசம்பளமாக ரூ.16 ஆயிரமாக இருந்த நிலையில் அதன்பிறகு ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ரூ.1 லட்சமாக உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி மாதம் பெற்று வந்த ரூ.1 லட்சம் சம்பளத்தை தற்போது இழக்கிறார்.

தினசரி, மாத படிகள் கிடையாது
மேலும் எம்பியாக இருப்போருக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த சலுகை இனி ராகுலால் பெற முடியாது. மேலும் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 ஆயிரம் கிலோ லிட்டர் மினரல் வாட்டர் வழங்குவார்கள். இதுவும் ராகுல் காந்திக்கு இனி இல்லை. மேலும் எம்பிக்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.500 மெடிக்கல் அலோவன்ஸாக வழங்குவார்கள். இது வரும் நாட்களில் ராகுலுக்கு கிடைக்காது. மேலும் எம்பிக்களுக்கு 3 செல்போன்கள் வழங்குவார்கள். இதில் இன்டர்நெட் வசதியுடன் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் போன் கால்கள் ஆண்டுக்கு பேசி கொள்ள முடியும். இனி இதுவும் ராகுல் காந்திக்கு இல்லை. இவ்வாறு பல சலுகைகளை ராகுல் காந்தி பறிகொடுக்க உள்ளார்.

பயண செலவுகள் ரத்து
இதுதவிர எம்பியாக இருப்பவர்கள் விமானத்தில் இந்தியாவில் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் ஆண்டுக்கு 34 முறை இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கு தோராயமாக ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சலுகை இனி ராகுல் காந்திக்கு கிடையாது. மேலும் ரயில் பயணம் என்றால் எம்பிக்களுக்கு பர்ஸ்ட் கிளாஸ் ஏசி பெட்டி ஒதுக்கப்படும். ஆண்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இதில் செல்லலாம் என்ற நிலையில் ராகுல் இனி செல்ல முடியாது. மேலும் சாலை மார்க்கமாக பயணம் செய்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.16 வழங்குவார்கள். அதுவும் இனி அவருக்கு கிடைக்காது.

மின்சாரம்-தண்ணீர் வசதி
மேலும் எம்பியாக இருப்போருக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த சலுகை இனி ராகுலால் பெற முடியாது. மேலும் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 ஆயிரம் கிலோ லிட்டர் மினரல் வாட்டர் வழங்குவார்கள். இதுவும் ராகுல் காந்திக்கு இனி இல்லை. மேலும் எம்பிக்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.500 மெடிக்கல் அலோவன்ஸாக வழங்குவார்கள். இது வரும் நாட்களில் ராகுலுக்கு கிடைக்காது. மேலும் எம்பிக்களுக்கு 3 செல்போன்கள் வழங்குவார்கள். இதில் இன்டர்நெட் வசதியுடன் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் போன் கால்கள் ஆண்டுக்கு பேசி கொள்ள முடியும். இனி இதுவும் ராகுல் காந்திக்கு இல்லை. இவ்வாறு பல சலுகைகளை ராகுல் காந்தி பறிகொடுக்க உள்ளார்.

பிற நாடுகளை ஒப்பிடும்போது...
மேலும் இந்தியாவில் ஒருமுறை எம்பியாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் பென்சன் உண்டு. மாதம் ரூ.25 ஆயிரம் பென்சன் கிடைக்கும். இந்தியாவில் எம்பிக்களின் சம்பளம் மற்றும் அலோவன்ஸ், சலுகைகளை சேர்த்தால் இது சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி நாட்டின் எம்பிக்களை விட அதிகமாகும். ஆனால் வெறும் சம்பளத்தை மட்டும் பார்த்தால் மேற்கூறிய நாடுகளில் இருந்து இந்தியா பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications