தன்பாலின திருமணம் ரொம்பவே தப்பு! பாலியல் "நோய்கள்" அதிகரிக்குமாம்.. ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு பரபர
டெல்லி: தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், இது குறித்து ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளனர்.
இந்தியா உட்படப் பல நாடுகளிலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பல வித பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் முதல்முறையாகக் கடந்த 2018இல் தன்பாலின ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது. தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த வரலாற்றுத் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
தன்பாலின திருமணம்: இதனிடையே தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், பல மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் தன்பாலின ஈர்ப்பை ஒரு "கோளாறு" என்றும், தன்பாலின திருமணத்தை அங்கீகரித்தால் அது சமூகத்தில் தன்பாலின ஈரப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் ஆர்எஸ்எஸ் பெண்கள் பிரிவான சம்வர்தினி நியாஸ் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி நடத்திய சர்வேவில் பல வல்லுநர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதில், "நாடு முழுக்க இருக்கும் பல வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்டு இந்த சர்வேவை உருவாக்கியுள்ளோம். அதில் சுமார் 70 சதவீத மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஓரினச்சேர்க்கை ஒரு கோளாறு என்றும் 83 சதவீதம் பேர் இதன் மூலம் பாலியல் நோய் பரவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சீர்குலைவை ஏற்படுத்தும் இதுபோன்ற திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினால் இந்த நோயாளிகளைக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக அது சமூகத்தில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும். இதுபோன்ற உளவியல் கோளாறு உள்ள நோயாளிகளைக் குணப்படுத்த ஆலோசனையே சிறந்த வழி.
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்கள் பெற்றோர்கள் ஆகும் போது, தங்கள் குழந்தைகளைச் சரியாக வளர்க்க முடியாது என்று 67 சதவீத டாக்டர்கள் கருதுகிறார்கள்" என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேவையில்லை: தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நிலையில், அவர்கள் இந்த சர்வேவை நடத்தியுள்ளனர்.
மேலும், சுமார் 57% வல்லுநர்கள் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கத் தேவையில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக இது தொடர்பான வழக்கில் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காமல் இதுபோன்ற பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications