ராகுல் மீண்டும் எம்பியா வேண்டுமா? ‛கை’க்கு மாஜி அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஐடியா!என்ன தெரியுமா?
டெல்லி: ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் மேல்முறையீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2014 முதல் 2017 வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய முகுல் ரோஹத்கி காங்கிரஸ் கட்சிக்கு ஐடியா கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் மத்திய அரசு வழங்கிய அட்டர்னி ஜெனரல் பொறுப்பை தட்டிக்கழித்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அட்வைஸ் வழங்கி உள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அப்போது கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் மோடி பெயர் குறித்து பேசி ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேற்று நேரில் ஆஜரானார். தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

தகுதி நீக்கம்
மேலும் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாள் ஜாமீன் வழங்கி தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்தியாவில் குற்றம் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்குகளில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேலாக சிறை தண்டனை விதிக்கப்படும் நபர்களை எம்பி, எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம். இதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இடம்வழங்குகிறது. அதனடிப்படையில் தான் நேற்று ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் எம்பி பதவியை இழந்துள்ளார்.

முகுல் ரோஹத்கி விளக்கம்
இந்நிலையில் தான் ராகுல் காந்தி சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கை பற்றியும், அவரால் மீண்டும் எம்பியாக வர முடியுமா? இல்லையா? என்பது பற்றியும் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோஹத்கி முக்கிய பாயிண்டுகளை தெரிவித்துள்ளார். இதுபற்றி முகுல் ரோஹத்கி கூறுகையில், ‛‛சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கி உள்ளது. இதனை எதிர்த்து உடனடியாக காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் காலதாமதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் உள்ளனர்.

மேல்முறையீடு செய்வது தான்
கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட போதே அவரது தகுதி நீக்கம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றானது. அந்த வகையில் தான் நேற்று அவர் தகுதி நீக்கம் செய்துள்ளது. மேலும் வழக்கில் மேல்முறையீடு செய்வதில் தாமதம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி இறுதியில் தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செய்ய வேண்டியது என்பது மேல்முறையீடு செய்து திறம்பட வாதாடி வெல்வது தான்'' என்றார்.

யார் இந்த முகுல் ரோஹத்கி?
முகுல் ரோஹத்கி கடந்த 2014 ஜூன் மாதம் முதல் 2017 ஜூன் வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். கேகே வேணுகோபால் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அட்டர்ஜி ஜெனரல் பதவி என்பது 3 ஆண்டு காலம் தான். ஆனால் பணி நீட்டிப்பு என்ற அடிப்படையில் கேகே வேணுகோபால் 2017 முதல் 2022 வரை பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் முகுல் ரோஹத்கியை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக மத்திய அரசு தேர்வு செய்தது. ஆனால் அவர் அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications