முன்பதிவு செய்தும் ரயலில் சீட் கிடைக்கலையா.. இதை செய்யுங்க போதும்! 5 நிமிடத்தில் பிரச்சனை சரியாகும்!
டெல்லி: முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சூழல்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவில் அனைவரும் விரும்பி பயணிக்கும் பொது போக்குவரத்து முறையாக ரயில்கள் இருக்கிறது. செலவு குறைவு, கழிப்பறை வசதி இருக்கிறது போன்ற காரணங்களால் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

உரிய டிக்கெட் இல்லாத பயணிகள்: அதேநேரம் சமீப காலங்களாக முன்பதிவு செய்யாத பயணிகள் இதுபோல முன்பதிவு பெட்டிகளில் ஏறிக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. முன்பு கூட ஸ்லீப்பர் பெட்டிகளில் மட்டுமே இதுபோல நடக்கும். ஆனால், இப்போது முதல் ஏசி வகுப்பு வரை இதுபோன்ற சம்பவங்கள் பரவலாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் உபி மாநிலத்தில் வந்தே பாரத் ரயில்களிலும் கூட இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.. உங்களுக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உங்களது முன்பதிவு சீட்டில் வேறு யாராவது அமர்ந்து கொண்டு இருந்தால்.. முதலில் அவர்களிடமே கேட்கலாம். பெரும்பாலான நேரங்களில் தமிழகத்தில் இப்படிச் சொன்னாலே போதும் அவர்களாகவே வேறு சீட்டிற்கு போய்விடுவார்கள். சொல்லியும் நகரவில்லை என்றால் டிடிஇ அதாவது டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளிக்கலாம். அவர் அந்த பயணியை முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறச் சொல்வார்.
என்ன செய்யலாம்: இதுவரை எல்லாமே ஓகே தான். ஆனால், டிடிஇ அலுவலரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும். இதுவே பலருக்கும் இருக்கும் சந்தேகம். இதுபோன்ற நேரங்களில் பெரும்பாலானோர் எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்து இந்தியன் ரயில்வேவை டேக் செய்து புகார் அளிப்பார்கள். அப்படிச் செய்யும் போது எல்லா நேரமும் தீர்வு கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.
ஆன்லைனில் புகார்: இதுபோன்ற நேரங்களில் நீங்கள் இரண்டு விஷயங்களை மேற்கொள்ளலாம். முதலில் Railway Madad என்ற சைட்டில் சென்று புகார் அளிக்கலாம். முன்பதிவு செய்த பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் குறித்து இதில் புகார் அளித்தால் போதும்.. உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இதற்காக நீங்கள் Railway Madadஇன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.. அங்கு நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவிட வேண்டும். பிறகு Send OTPஐ கிளிக் செய்தால் ஒடிபி உங்களுக்கு மொபைலுக்கு அனுப்பப்படும். அதை அந்த சைட்டில் பதிவிட வேண்டும். பிறகு உங்கள் டிக்கெட் PNR நம்பரை பதிவிடவும்.. அதன் பிறகு புகாரின் டைப் மற்றும் சப் டைப்களை தேர்வு செய்யவும்.
எப்போது இந்த சிக்கலோ அந்த தேதியைப் பதிவு செய்யுங்கள். மேலும், போட்டோ எதாவது இருந்தால் அதையும் இணைக்கலாம். உங்கள் புகார் குறித்து விரிவாக எழுதிப் பதிவிட வேண்டும். பிறகு சம்மிட் என்பதை கிளிக் செய்து புகார் அளிக்கவும்.
ஹெல்ப் லைன்: அப்படி இல்லை என்றால் ரயில்வே ஹெல்ப்லைன் எண் 139ல் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இல்லையென்றால் ரயிலில் உள்ள ரயில்வே போலீஸ் படையின் உதவியையும் நாம் கோரலாம். இந்த ஆப்ஷன்களில் எதாவது ஒன்றை நாம் செய்தால் உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications