3 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி
டெல்லி: 3 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 22 மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்திருந்தார். இதனால் தமிழக அரசு அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில் தமிழக அரசு கூறியிருந்ததாவது: தமிழக மக்களின் உரிமைகளை தமிழக ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதிலும் குறுக்கே நிற்கிறார். தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் மதிக்காமல் அவர் துஷ்பிரயோகம் செய்து வருகிறார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது போல் சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மனு மீது கடந்த 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது திங்கள்கிழமைக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடையே நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த 10 மசோதாக்களையும் 'I withhold assent" என்ற குறிப்புடன் தமிழக அரசுக்கு கடந்த 13 ஆம் தேதி திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
இதையடுத்து தமிழக சட்டசபை கடந்த 18ஆம் தேதி அவசரமாக கூடியது. அந்த கூட்டத்தில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை கூட மதிக்காதவர் என திமுக இளைஞரணிக்கு எழுதிய கடிதத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் பெயரை போடாமல் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 5.15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. இதனிடையே ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்க முடியாது. 8 கோடி மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது. மசோதாக்களை உரிய விளக்கமின்றி திருப்பி அனுப்பியுள்ளார் என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது தலைமை நீதிபதி கூறுகையில் 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் எந்த முடிவையும் எடுக்காமல் மசோதாக்களை ஆளுநர் எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன், மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆவணங்கள் எங்கே, என சரமாரி கேள்விகளை எழுப்பிய நிலையில் வரும் 24 ஆம் தேதி கேரள ஆளுநருக்கு எதிரான வழக்குடன் சேர்த்து தமிழக அரசின் வழக்கு விசாரிக்கப்படும் என்றார்.
10 மசோதாக்கள் என்னென்ன: 10 மசோதாக்கள் : சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா ஆகியவை ஆளுநரின் ஒப்புதலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களாகும்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications