10.40 டூ 10.40.. டிடிவி தினகரனுக்கு நெருக்கடி.. சீறி வந்த கேள்விகள்.. டெல்லி தலை போட்ட கண்டிஷன்?
டெல்லி: இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தி இருக்கிறது. இந்த விசாரணையை தொடர்ந்து டெல்லியில் இவருக்கு அரசியல் ரீதியாக சில கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் உள்ளது. 2017ல் அதிமுகவில் மோதல் நிலவிய போது இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற புகார் உள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி விடுதலை செய்யப்பட்டார் டிடிவி தினகரன். அதே சமயம் இந்த வழக்கில் டிடிவி தினகரனை ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரா மீதும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன்
இந்த வழக்கில் சுகேஷ் சந்திராவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் மேற்கொண்டு இதில் விசாரணை நடத்தப்படவில்லை. இதில் விசாரணைக்கு இடைக்கால தடை இருந்தாலும், இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. அதில் லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரனுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது,

இரட்டை இலை
இதில்தான் கடந்த 12ம் தேதி தினகரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. காலை 10.40 மணிக்கு டிடிவி தினகரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆனார். இரவு 10.40 மணி வரை அவரிடம் விடாமல் விசாரணை நடத்தப்பட்டது. இடையில் உணவு இடைவேளை இரண்டு முறை எடுக்கப்பட்டது. அதோடு இடை இடையே அதிகாரிகள் வேறு சில பணிகளையும் செய்தனர்.

வழக்கு
இந்த வழக்கில் சுகேஷ் சந்திராவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி. அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது. பணம் வந்தது எப்படி உள்ளிட்ட பல கேள்விகள் தினகரனிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அவருக்கு எதிராக கடுமையான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் சந்திரா குறித்து அதிக அளவில் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

சுகேஷ் சந்திரா
இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுதலை பெற டெல்லியில் சில டாப் தலைகள் இவருக்கு சில கண்டிஷன்களை விதித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. அடுத்த வருட இறுதியில் தேர்தல் கூட்டணிகளுக்கான பணிகள் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக தனித்து செயல்படுகிறது. சசிகலாவின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.

கண்டிஷன்
அதேபோல் அமமுகவை தினகரன் கட்டுப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 2024 தேர்தலை குறி வைத்து டிடிவி தினகரனுக்கு அரசியல் ரீதியாக சில கண்டிஷன்களை டெல்லி பாஜக தலைகள் சிலர் விதித்தாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இவை என்ன மாதிரியான கண்டிஷன்கள், டிடிவி தரப்பிடம் யார் பேசியது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. பெரும்பாலும் கூட்டணி தொடர்பான அழுத்தமாக இது இருக்கலாம் என்கிறார்கள்.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications