களத்தில் கிங் கோலி.. இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்! 5வது நாளில் போட்டி டிரா ஆனால் என்ன ஆகும்
டெல்லி: இன்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸின் கடைசி நாள் நடக்கும் நிலையில், போட்டி டிராவில் முடிந்தால் யார் வெற்றியாளர் என்று என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸ் இப்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும். அது சரி, இன்று கடைசி நாள் போட்டி நடக்கும் நிலையில், போட்டி டிராவில் முடிந்தால் யார் வெற்றியாளர் என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம் அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
டெஸ்ட் தொடர்: அதற்கு முன்பு WTC என்றால் என்ன.. அதில் இறுதிப் போட்டிக்கு அணிகள் எப்படி தேர்வாகிறது என்பதைப் பார்க்கலாம். ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளுக்கு எப்படி உலகக் கோப்பை இருக்கிறதோ அதுபோல, டெஸ்ட் போட்டிக்கானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். டெஸ்ட் போட்டிகளைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஐசிசி இதைக் கொண்டு வந்தது. இதற்கான போட்டிகள் இரண்டு ஆண்டுகள் நடக்கும் நிலையில், இறுதிப் போட்டியில் டாப் இரு அணிகள் முன்னேறும்.
இதில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணிக்கு 6 புள்ளிகளும், டிரா ஆனால் 4 புள்ளிகளும் வழங்கப்படும். இதில் 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் டாப் இரண்டு இடங்களைப் பிடித்தன. இதையடுத்து இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தப் போட்டி பொதுவான ஆடுகளத்தில் தான் நடைபெறும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா: அதன்படி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் டாஸில் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து பேட் செய்த இந்தியா தொடக்கம் முதலே தடுமாறியது. ரஹானே, ஷர்துல் தாக்கூர், ஜடேஜாவின் ஆட்டத்தால் இந்தியா 296 ரன்களை எடுக்க முடிந்தது.
பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 270 ரன்களை எடுத்து 8 விக்கெட் இழந்த நிலையில், அவர்கள் டிக்ளேர் செய்தனர். இதையடுத்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியாவுக்கு ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. 4ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழந்து 164 ரன்களை எடுத்திருந்தது. இப்போது விராட் கோலி, ரஹானே களத்தில் இருக்கிறார்கள். கைவசம் 7 விக்கெட் இருக்கும் நிலையில், கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது.
டிரா ஆனால் என்னாகும்: கடைசி நாளான இன்று போட்டி டிராவில் முடிந்தால் யாருக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம்.. ஏனென்றால் டெஸ்ட் போட்டி டையில் முடிவதெல்லாம் அடிக்கடி நடக்கும் ஒன்று தான். விதி எண் 16.3.3இன் படி, போட்டி டிரா செய்யப்பட்டாலோ, கைவிடப்பட்டாலோ, இரு அணிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
எப்போதும் டெஸ்ட் போட்டி 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸில் 6ஆவது நாள் ரிசர்வ் நாளாக இருக்கிறது. ஆனால், போட்டி மழை காரணமாகப் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழந்த நேரத்தை ஈடுசெய்ய இந்த 6ஆவது நாளில் போட்டி நடக்கும். அதுவும் முழு நாளும் போட்டி நடக்காது.
ரிசர்வ் டே: உதாரணத்திற்கு இன்று 3 மணி நேரம் போட்டி மழையால் தாமதமாகிறது என்றால், அந்த 3 மணி நேரம் மட்டும் நாளை ரிசர்வ் நாளில் போட்டி நடக்கும். மழை அல்லது போதிய வெளிச்சமில்லை எனப் போட்டி பாதிக்கப்பட்டால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும். இருப்பினும், இப்போது வரை போட்டி எங்கும் பாதிக்கப்படவில்லை. இன்றும் மழை வர வாய்ப்புகள் குறைவு என்பதால் ரிசர்வ் டே பயன்படுத்தப்படாமலேயே போகும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications