திடீர்னு.. ஒரே மாசத்தில்.. இந்தியர்களின் 20 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.. என்ன காரணம்?
மே 15 முதல் ஜுன் 15 வரை 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது
டெல்லி: மே 15 முதல் ஜுன் 15 வரை 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடியாக தெரிவித்துள்ளது... அதிலும் 3 கட்டங்களாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறுவோரின் கணக்கு முடக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.
உலகிலேயே சோஷியல் மீடியாவில் மிக முக்கியமானதும், முதன்மையானதும் வாட்ஸ் அப்தான்.. இந்த வாட்ஸ்அப்புக்கு மில்லியன் கணக்கான பயனாளர்கள் இருக்கின்றனர்.. அதிலும் இந்தியாவில் வாட்ஸ்அப் சோஷியல் மீடியாவில் கோடிக்கணக்கில் பயனாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தன.. மேலும் இதுகுறித்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது.

கணக்குகள்
தற்போது, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், மே 15-ம் தேதி முதல் ஜுன் 15-ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனர்களின் 20 லட்சம் கணக்குகளை நிறுவனம் முடக்கி உள்ளது.. வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய முதல் மாத இணக்க அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

அறிக்கைகள்
புதிய விதிகளின் கீழ், ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட டிஜிட்டல் தளங்கள் இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும்.. இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு விளக்க அறிக்கை அளித்துள்ளது. அதில், "இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருசிலர் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி உள்ளிட்ட முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வெளிவந்துள்ளது..

புகார்கள்
தவறுகள் நடப்பதற்கு முன்பாகவே அதை தடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறோம். நூற்றுக்கணக்கான புகார்கள் வந்ததை அடுத்து தங்களிடமுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் 20 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.. ஒருவரின் கணக்கில் 3 கட்டங்களாக ஆராய்ந்து, அதாவது ரிஜிஸ்தர் செய்தல், செய்தி அனுப்புதல், உள்ளிட்டவை அடிப்படையில் அவை கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்குகள் முடக்கப்படும்..

அறிக்கைகள்
இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள் தங்களது செயல்திறனை மேம்படுத்த வழிவகை செய்யும்.... மேலும் இதுவரை 345 புகார்கள் வந்துள்ளன" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் கூகுள், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக ஊடக தளங்களும் தங்களது இணக்க அறிக்கைகளை இதுபோலவே சமர்ப்பித்துள்ளன.

பரபரப்பு
சமூக ஊடகங்கள் குறித்த புகார்களை பெற இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில்தான், மத்திய அரசின் டிஜிட்டல் சட்டத்தை இயற்றப்பட்டது.. இந்நிலையில், இந்தியாவில் திடீரென ஒரே வாரத்தில் 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications