உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம்- உலக நாடுகள் எந்த பக்கம் நிற்கின்றன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யாவின் கொடூர யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இப்போது ரஷ்யா, உக்ரைன் என அணி சேர்ந்து வருகின்றன. உலகப் போர்கள் நடந்த போது நாடுகள் அணிபிரிந்து நிற்பதைப் போல இப்போது சர்வதேசம் பிளவுபட்டு நிற்கிறது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் சுற்றி வளைப்பு, கருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைகளின் உக்கிர ஒத்திகைகள் என ரஷ்யாவை ஆத்திரமூட்டுகிற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. அண்டை நாடான உக்ரைனை உசுப்பிவிட்டு நேட்டோ வலைக்குள் கொண்டுவரவும் அமெரிக்கா முனைந்தது.

இத்தகைய நிலையில் தமது வலிமையை நிலைநாட்ட ரஷ்ய தேசிய இனத்தவருக்கு ஆதரவு என்ற பெயரில் உக்ரைனுக்குள் நுழைந்தது ரஷ்யா. உக்ரைனில் கடந்த 5 நாட்களாக இடைவிடாத தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது ரஷ்யா. உக்ரைனுக்காக உடனே ஓடி வரும் நேட்டோ படைகள் என்ற எதிர்பார்ப்பு இன்னும் நிகழவில்லை. அதற்கான உடனடி சாத்தியமும் இல்லை என்றே தெரிகிறது.

ரஷ்யா ஆதரவு

ரஷ்யா ஆதரவு

அதேநேரத்தில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களது நிலைமையை வெளிப்படுத்தவும் தொடங்கிவிட்டன. ரஷ்யாவுக்கு ஆதரவாக சிரியா, ஈரான், சீனா, அஜர்பைஜான், பெலாரஸ், அர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், கியூபா உள்ளிட்டவை இணைந்துள்ளன. சிரியாவில் ரஷ்யா ராணுவ தளம் அமைத்து முகாமிட்டிருக்கிறது. சிரியா-ரஷ்யாவை சீண்டும் வகையில் ஒரு பக்கம் இஸ்ரேலும் இன்னொரு பக்கம் துருக்கியும் தொடர் தாக்குதல்களை சிரியா மீது மேற்கொண்டிருக்கின்றன. இதனால் இயல்பாகவே ரஷ்யாவின் அணியில் சிரியா நிற்கிறது. இதேபோல்தான் ஈரானுக்கு ஆதரவுக் கரம் கொடுப்பதால் அந்த நாடும் ரஷ்யாவுடன் நிற்கிறது.

சீனா, வடகொரியா

சீனா, வடகொரியா

மேற்குலக நாடுகள் சீனாவுடன் மல்லுக்கட்டிய போது அந்நாட்டுக்கு உற்ற தோழனாக நின்றது ரஷ்யா. இப்போது ரஷ்யாவின் உக்கிரமான யுத்தத்துக்கு உறுதுணை காட்டுகிறது சீனா. அர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகள் அனைத்தும் முந்தைய சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருந்தன. ரஷ்யா மற்றும் இந்த 5 முந்தைய சோவியத் ஒன்றிய நாடுகள் இடையே சி.எஸ்.டி.ஓ எனப்படும் ராணுவ கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதன்படி ரஷ்யா மீதான எந்த ஒரு தாக்குதலையும் இதர 5 நாடுகளும் தங்கள் மீதான தாக்குதல்களாக கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பதாகும். நேட்டோ உள்ளிட்ட நாடுகள் யுத்தத்தில் இறங்கினால் ரஷ்யா பக்கம் வடகொரியா நிற்க தயாராக உள்ளது.

உக்ரைன் ஆதரவு

உக்ரைன் ஆதரவு

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், ஜெர்மனி, துருக்கி, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, நார்வே, நெதர்லாந்து, போர்ச்சுகல், லிதுவேனியா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகியவை அணிவகுத்துள்ளன. ரஷ்யாவை உக்ரைன் உக்கிரமாக எதிர்த்து யுத்தம் நடத்த வேண்டும் என்பதற்காக ஏவுகணைகளுடன் கனரக ஆயுதங்களை அனுப்ப ஜெர்மன் முடிவு செய்திருக்கிறது. உக்ரைனுக்கு போர் தளவாடங்களுடன் ராணுவ வாகனங்களை ஜெர்மன் அனுப்ப உள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும் உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுப்பதற்கான ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்கா, ஜெர்மன் போல பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து, நார்வே ஆகியவையும் முனைப்பாக உள்ளன.

நடுநிலை நாடுகள்

நடுநிலை நாடுகள்

இந்தியாவைப் பொறுத்தவரையில் ரஷ்யா- உக்ரைன் யுத்தத்தில் நடுநிலையை வெளிப்படுத்துகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள், ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்தியா நடுநிலையாக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அதிக ஆதாயம் யாரால் என்பதைப் பொறுத்தே முடிவு எடுக்கும். உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் தொடங்கிய போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்யாவின் தலைநகரில்தான் இருந்தார். இருந்தாலும் தமது நிலைப்பாட்டை பாகிஸ்தான் பகிரங்கப்படுத்தவில்லை. இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் ரஷ்யா 3-வது இடத்திலும் உக்ரைன் 18-வது இடத்திலும் உள்ளது. இலங்கையின் சுற்றுலா, தேயிலை வர்த்தகம் இவை இப்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கையும் நடுநிலை வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

யார் எந்த பக்கம்?

யார் எந்த பக்கம்?


ரஷ்யா அணி
----------
சிரியா
ஈரான்
சீனா
அஜர்பைஜான்
பெலாரஸ்
அர்மீனியா
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
கியூபா

உக்ரைன்
----------
அமெரிக்கா
பிரிட்டன்
இஸ்ரேல்
ஜெர்மனி
ஜப்பான்
துருக்கி
பெல்ஜியம்
கனடா
டென்மார்க்
பிரான்ஸ்
ஐஸ்லாந்து
இத்தாலி
நார்வே
நெதர்லாந்து
போர்ச்சுகல்
லிதுவேனியா
ஜப்பான்
தென்கொரியா
ஆஸ்திரேலியா

நடுநிலை

இந்தியா
இலங்கை

குழப்ப நிலை

பாகிஸ்தான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+