ககன்யான் இருக்கட்டும்! சந்திரயான் 4 எப்போ தெரியுமா? உலக நாடுகள் செய்யாததை சாதிக்க போகும் இந்தியா
டெல்லி: சந்திரயான் -3 மிஷன் மூலம் இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையைப் படைத்த நிலையில், சந்திரயான் 4 திட்டம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வில் இந்தியா ரொம்பவே முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரோ தொடர்ச்சியாகப் பல வெற்றிகரமான மிஷன்களை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அவற்றைக் குறைந்த செலவில் செய்து காட்டி வருகிறது.

இதன் காரணமாகவே உலகின் பல டாப் நாடுகளும் சாட்டிலைட் ஏவுவது தொடங்கி பல்வேறு விஷயங்களுக்கு இந்தியா பக்கம் வருகிறார்கள். அடுத்தகட்டமாக இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக அவர்கள் ககன்யான் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
சந்திரயான் 4: சமீபத்தில் தான் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களைப் பிரதமர் மோடி சமீபத்தில் அறிமுகம் செய்தார். அவர்கள் அடுத்தாண்டு விண்வெளிக்குச் சென்று முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்கிடையே இஸ்ரோவின் சந்திரயான் 4 குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்திரயான் வரிசையில் அடுத்த மிஷனுக்கு இந்தியா ரெடியாகி வரும் நிலையில், அடுத்தகட்டமாகச் சந்திரயான்-4 வரும் 2028ஆம் ஆண்டில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் கூறுகிறார்கள்.
லூபெக்ஸ் மிஷன் என்று அழைக்கப்படும் இந்த மிஷன் வரும் 2028இல் ஏவப்படும் என இஸ்ரோ டாக்டர் நிலேஷ் தேசாய் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 மிஷனை காட்டிலும் சந்திரயான்- 4 மிஷன் பணிகள் சிக்கலானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திரயான்-4 மிஷன் மூலம் இந்தியா நிலவின் மேற்பரப்பில் இருந்து கற்களை எடுத்து வரத் திட்டமிட்டுள்ளது. இந்த மிஷன் மட்டும் வெற்றிகரமாக முடிந்தால் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.
முன்னோட்டம்: இஸ்ரோ வரும் 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஒரு முன்னோட்டமாக இது அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. நிலவுக்கு மனிதனை அனுப்ப அடுத்த 15 ஆண்டுகள் இருக்கிறது என்ற போதிலும், இதுவே தங்கள் நீண்ட கால திட்டமாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 தரையிறங்கிய அதே நிலவின் தென் துருவத்தில் இறங்கி அங்கிருந்து பாறை மாதிரிகளைக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் நிலவில் நீர் இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் கண்டறிய முடியும். சந்திரயான்-3ஐ காட்டிலும் அதிக தூரம் செல்லும் வகையில் இதன் ரோவர் வடிவமைக்கப்படும். இதற்காக 350 கிலோ எடையுள்ள ரோவர் நிலவுக்கு அனுப்பப்படும். இதுவரை ஆய்வு செய்யப்படாத சில சந்திரனின் பள்ளங்களில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
திட்டம் என்ன: இது சந்திரயான் -3 போலவே தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சந்திரயான் 4 விண்கலனின் ஒரு பகுதி மட்டும் நிலவின் மேற்பரப்பில் இருந்து கற்களை எடுத்து வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கை போன்ற அமைப்பும் இதில் இருக்கும் எனத் தெரிகிறது. அதன் மூலம் தான் நிலவின் கற்கள் பூமிக்கு எடுத்து வரப்படும்.
சந்திரனின் மேற்பரப்பில் இருந்து ஒரு விண்கலம் எப்படி மேலே செல்ல முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ ஏற்கனவே ஒரு பரிசோதனையை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications