இந்தியாவில் சில நாட்களில் 5ஜி! முதலில் 4 நகரங்களில் மட்டும் தானாம்.. உங்க ஊரில் எப்போ தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா டெலிகாம் துறை அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்ட நிலையில், 5ஜி சேவை தொடர்பாக வெறு சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொபைல் தொழில்நுட்பம் என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மொபைல் பயன்பாடு என்பது இந்தியாவில் கணிசமாக அதிகரித்து உள்ளது.

அதிலும் கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் மொபைல்போனில் வாங்கும் பழக்கமும் அதிகரித்தது. இது மக்களுக்கும் பெரியளவில் உதவியது.

 டெலிகாம் துறை

டெலிகாம் துறை

இந்தியாவின் டெலிகாம் சந்தையையே புரட்டிப்போட்டது 4ஜி சேவை தான். மாதத்திற்கு அன்லிமிடட் 4ஜி டேட்டாவை டெலிகாம் நிறுவனங்கள் வழங்க, அது இந்தியாவின் டேட்டா பயன்பாட்டைப் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இது பல முறைகளில் இந்தியாவுக்கு நன்மையையே அளித்து உள்ளது. இப்போது நாட்டில் பெரும்பாலான இடங்களில்ல 4ஜி சேவை வந்துவிட்டது. இதனால் விரும்பிய நேரத்தில் பொதுமக்களால் இணையத்தை அணுக முடிகிறது.

 அடுத்தகட்ட பாய்ச்சல்

அடுத்தகட்ட பாய்ச்சல்

இப்போது இந்தியா தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. 5ஜி தொழில்நுட்பத்திற்கான காத்திருப்பு காலம் இந்தியாவில் முடிந்துவிட்டது. வரும் அக். 1ஆம் தேதி நாட்டில் 5ஜி சேவையைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார். அப்போது 5ஜி தொழில்நுட்பம் குறித்து முக்கிய தகவல்களையும் 6ஜி குறித்தும் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மொபைல் காங்கிரஸ் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் 5ஜி தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.

எப்போது

எப்போது

இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்வு மொத்தம் 4 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் முதல் நாளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் மட்டுமே செய்து வைக்கிறார். எனவே, அக்.1ஆம் தேதியே நாட்டில் 5ஜி தொழில்நுட்பம் வந்துவிடும் என யாரும் நினைக்க வேண்டும். ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தீபாவளி சமயத்தில் 5ஜி சேவை தொங்கப்படும் எனக் கூறியுள்ளன. இருப்பினும், சரியான தேதியை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

 4 நகரங்கள்

4 நகரங்கள்

5ஜி எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் அனைத்தும் அக்.1ஆம் தேதி தெளிவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய 4 நகரங்களில் மட்டும் 5ஜி சேவை இருக்கும் என ஜியோ அறிவித்து உள்ளது. ஏர்டெல் நிறுவனத்திலும் அதே நிலைத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மெல்ல நாடு முழுக்க 5ஜி சேவையை விரிவுபடுத்த டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

 விலை

விலை

இந்தியா முழுவதும் 2023 இறுதிக்குள் 5ஜி வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5ஜி திட்டங்களின் விலை அடுத்த மாதம் வெளியிடப்படும். 5ஜி திட்டங்கள் குறைவான விலையில் இருக்கும் என்றும் வேகமான இணையச் சேவைக்கு மிக அதிக கட்டணம் கொடுக்க தேவையில்லை என்றும் மத்திய ஐடி துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். இப்போது அன்லிமிடட் 4ஜி டேட்டாவுக்கு 500 ரூபாய் வரை செலுத்த வேண்டி உள்ளது. அதே அளவில் தான் 5ஜி விலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 உங்கள் ஏரியாவில் எப்போது

உங்கள் ஏரியாவில் எப்போது

ஏர்டெல் பயனர்கள் 5ஜி சேவைக்காகத் தனியாக புதிய சிம் வாங்க வேண்டிய அவசியமில்லை.. ஏனெனில் அந்த நிறுவனத்தின் 4ஜி சிம்களிலேயே 5ஜி சேவைக்கான சப்பார்ட் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. தங்கள் பகுதியில் 5ஜி சேவை இருக்கிறதா என்பதை ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் அதன் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். வோடபோன் ஐடியா (Vi)நிறுவனமும் விரைவில் இந்த 5ஜி போட்டியில் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+