8வது சம்பள கமிஷன் எப்போது நடைமுறைக்கு வரும்? டிஆர் பாலு கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் சொன்ன பதில்!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்பட பிற அலோவன்ஸ் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கும் வகையில் 8வது சம்பள கமிஷன் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இந்நிலையில் தான் 8 வது சம்பள கமிஷன் எப்போது நடைமுறைக்கு வரும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் 8 வது கமிஷன் தாமதப்படுத்துவது தொடர்பாக திமுக எம்பி டிஆர் பாலு கேட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறையின் இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நம் நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 8-வதுசம்பள கமிஷனை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி 8 வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பியாகினர். ஏனென்றால் அவர்களுக்கான சம்பளம் உள்பட பிற அலோவன்ஸ்கள் கிடுகிடுவென உயரும்.
மேலும் 8வது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். ஆனால் 6 மாதங்கள் ஆகியும் கூட இன்னும் 8 வது சம்பள கமிஷன் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்பி டிஆர் பாலு மற்றும் சமாஜ்வாதி எம்பி ஆனந்த் படாரியா ஆகியோர் கேள்விகள் கேட்டு இருந்தனர்.
இந்த கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்தார். எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியதாவது: 8 வது சம்பள கமிஷன் அமைப்பது பற்றி மேஜர் ஸ்டாக்ஹோல்டர்களாக இருக்கும் பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் ஆட்சேர்ப்பு - பயிற்சி துறைகளிடம் இருந்து விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து மாநிலங்களிடமும் இருந்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது . 8வது ஊதியக் குழு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்த ஊதிய குழு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அந்த பரிந்துரைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்'' என்றார். வழக்கமாக அரசு ஊழியர்களின் ஊதியத்தை திருத்துவதற்காக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மத்திய அரசால் ஊதிய குழு அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதிய குழு கடந்த 2014 பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அதன்படி 8 வது ஊதிய குழு அடுத்த ஆண்டு 2026-2027 நிதியாண்டில் செயல்பாட்டு வரலாம் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என்று சுமார் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பலன் பெற உள்ளனர். இதுதொடர்பாக
அம்பிட் கேபிடல் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‛‛8 வது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு பணியாளர்களின் சம்பளம் மொத்தமாக 30-34% வரை உயரலாம். ‛ஃபிட்மென்ட் ஃபாக்டர்' என்பது 1.83 முதல் 2.46 வரை இருக்கலாம்.
அதன்படி 1.83 என் ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) நடைமுறைப்படுத்தப்பட்டால் ரூ.18 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச சம்பளம் ரூ.32,940 ஆக உயரும். அதேவேளையில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.46 என்று கொண்டு வரப்பட்டால் குறைந்தபட்ச சம்பளம் ரூ.44,280 ஆக அதிகரிக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற அரசு ஊழியர்களின் சம்பளம் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications