பரபர வாக்கு எண்ணிக்கை.! கண்டுகொள்ளாத ராகுல் காந்தி.. கூலாக இப்போ என்ன செய்கிறார் பாருங்க
டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ள போதிலும், அதை ராகுல் காந்தி பெரிதாக எடுத்துக் கொண்டதை போலத் தெரியவில்லை.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் தான் நடந்து முடிந்தன. இரு மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும், அதே நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது.
குஜராத்தில் டிச.1 மற்றும் டிச.5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்கு முன்னதாகவே இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாகக் கடந்த. நவ. 12ஆம் தேதி நடைபெற்றது.
குஜராத் சட்டசபைத் தேர்தல்.. 32 ஆண்டுகளாக மணிநகரில் மாறாத டிரென்ட்.. தமிழர்களின் ஆதரவு யாருக்கு?

இமாச்சல பிரதேசம்
இமாச்சல பிரதேசத்தில் இதுவரை அனைத்து தேர்தல்களிலும் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறியே ஆட்சியைப் பிடித்துள்ளன. 68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேசத்தில் கடந்த முறை பாஜக 44 இடங்களில் வென்றன. காங்கிரஸ் கட்சியால் 21 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. கடந்த பல தேர்தல்களாகவே இமாச்சல பிரதேச மக்கள் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மாறி மாறியே வாக்களித்துள்ளனர். ஆனால், அந்த டிரெண்டும் இந்தத் தேர்தலில் மாற வாய்ப்புகள் அதிகம்.

குஜராத்
இதில் குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அங்குக் கடந்த 2017 தேர்தலில் பாஜகவின் இடங்கள் சற்று குறைந்தன. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், பாஜக பெரும்பான்மையைப் பெற்ற போதிலும், 99 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களுக்குப் பிறகு முதல்முறையாக 77 இடங்களில் வென்றன. இன்று குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்தளவுக்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே!

ராகுல் காந்தி
கடந்த 2017 தேர்தலில், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இத்தனை இடங்களில் வெல்ல ராகுல் காந்தியின் பிரசாரம் முக்கியமானதாக இருந்தது. ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குஜராத்தில் பல நாட்கள் பிரசாரம் செய்தார். இது 2017இல் காங்கிரஸ் வாக்கு வங்கி குஜராத்தில் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது. அதேநேரம் இந்த முறை அதுபோல எந்தவொரு சீரியஸான பிரசாரத்தையும் ராகுல் காந்தி மேற்கொள்ளவில்லை. வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே அவர் குஜராத்தில் பிரசாரம் செய்தார். இது தொடர்பாகக் கேட்ட போது, காங்கிரஸ் சைலெண்ட் பிரசாரம் என்ற புதிய பிரசார யுக்தியைக் குஜராத்தில் முன்னெடுத்துள்ளதாக காங்கிரசினர் கூறினர்.

பிரசாரம் இல்லை
இருப்பினும், இது காங்கிரஸ் கட்சிக்குப் பலன் தருவது ரொம்பவே கடினம். குஜராத்தில் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே பிரசாரம் என்றால், இமாச்சலில் ஒரு நாள் கூட ராகுல் காந்தி பிரசாரம் செய்யவில்லை. இமாச்சல பிரதேச தேர்தலுக்குப் பிரியங்கா காந்தி தான் பிரசாரத்தை முன்னெடுத்தார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் முகமாகப் பார்க்கப்படும் ராகுல் காந்தி எந்தவொரு பிரசாரத்தையும் மேற்கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

கண்டுகொள்ளவில்லை
இந்தச் சூழலில் இன்றைய தினம் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க டிரெணட்டில் பாஜகவே முன்னிலையில் இருக்கிறது. நாடு முழுக்க பல கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளன. இந்தத் தேர்தல்களில், குறிப்பாகக் குஜராத்தில் பாஜகவுக்கு எந்தளவுக்கு இடங்கள் கிடைக்கும் என்பதை நாடு முழுவதும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், தேர்தல் முடிவுகளை ராகுல் காந்தி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

ராஜஸ்தான்
ஏனென்றால் தேர்தல் முடிவுகள் ஒரு பக்கம் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து துளியும் கண்டு கொள்ளாமல் ராகுல் காந்தி வழக்கம் போல தனது பாத யாத்திரையை தொடங்கிவிட்டார். ராஜஸ்தான் மாநிலம் சூர்முகி ஹனுமான் கோயிலில் இருந்து அவர் வழக்கம் போல தனது பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். அங்குக் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரையில் உற்சாகமாகக் கலந்து கொண்டுள்ளனர். இந்த உற்சாகம் இன்று நாள் முழுக்க நீடிக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் சொல்ல வேண்டும்.

பாத யாத்திரை
காங்கிரஸின் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் சென்று முடிவடைகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களைக் காந்தி இந்த பாத யாத்திரையைத் தொடங்கி உள்ளதாகக் காங்கிரஸ் கூறுகிறது. இதுவரை காங்கிரஸ் இவ்வளவு பெரிய பாத யாத்திரையை நடத்தியதே இல்லை. 150 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பாத யாத்திரைக்கு, மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.. இது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கிறதா என்பதையும் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.