டெல்லியில் பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு.. 'லோன் உல்ப்' பாணி.. 3 பேர் கைது
டெல்லி: டெல்லியில் பெரும் தீவிரவாத தாக்குதல், காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் 3 பேர் அசாமில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த தகவலை டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் குஷ்வாஹா உறுதி செய்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பைப் வெடிகுண்டுகள், நவீன குண்டுகள் (ஐ.இ.டி), போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் மாதிரியிலான தாக்குதல் திட்டத்தோடு இவர்கள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

வட இந்தியாவில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் இவர்கள் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் நடைபெற்றது போன்ற 'லோன் வுல்ப்' வகை தாக்குதல்களை இவர்கள் நடத்த திட்டமிட்டு இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது மூன்று பேருமே தனித்தனியாக பிரிந்து சென்று பெரும் கூட்டம் இருக்கக்கூடிய பகுதிகளில், அதிக உயிர்ச் சேதத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. முன்னதாக அசாமில், தூத்னோய் ராசலீலா நிகழ்ச்சியில், இவர்கள் குண்டுவைக்க திட்டமிட்டிருந்ததாகவும், கடைசி நேரத்தில் இது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவிக்கிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், டெல்லியில் இவர்களுக்கு யாரேனும் உதவி செய்தனரா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி தவிர போபால் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்துவது இவர்கள் திட்டம் என கூறப்படுகிறது. பெரு நகரங்களில் காவல்துறை மிகுந்த உஷாராக இருப்பதாலும், நவீன பயிற்சிகள் அவர்களுக்கு இருப்பதாலும், சிறு நகரங்களை நோக்கி, தீவிரவாதிகளின் பார்வை திரும்பியுள்ளது, இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லிய
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications