நாட்டிலேயே அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நகரம் மும்பை தான்.. 2வது இடம் செம ஷாக்.. அப்போ சென்னை எங்கே
டெல்லி: இந்தியாவிலேயே அதிக கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்ட நாடுகள் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு கோடீஸ்வர குடும்பங்களுடன் மும்பை முதலிடத்தில் வருகிறது. மும்பையில் மொத்தம் 65 கோடீஸ்வர குடும்பங்கள் வசிக்கிறார்கள். மேலும், இந்த லிஸ்டில் சென்னையும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டின் தலைநகராக டெல்லி இருந்தாலும் கூட தொழிலதிபர்கள் பெரும்பாலும் இருப்பது மும்பையில் தான். இதன் காரணமாகவே மும்பையை நமது நாட்டின் பொருளாதார தலைநகர் என்று அழைக்கிறார்கள்.

பணக்கார குடும்பங்கள்: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் விரும்பி இருக்கும் இடமாக மும்பை தான் இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் "India Most Valueable Family Business" என்ற ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகள் பழமையான 200 பணக்கார குடும்பங்கள் இந்தியாவில் எங்கே இருக்கிறார்கள் என்பதை விளக்குவதே இந்த லிஸ்ட்டாகும்.
மும்பை டாப்: இந்த ரிப்போர்ட்டின்படி மும்பையில் தான் நாட்டிலேயே பணக்கார குடும்பங்கள் அதிகம் வசிக்கிறார்கள். அங்கு நாட்டில் உள்ள 200 பணக்கார குடும்பங்களில் 65 குடும்பங்கள் மும்பையில் தான் வசிக்கிறது. இந்த 65 குடும்பங்கள் கைவசம் இருக்கும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு மட்டும் ₹67,33,900 கோடியாகும். நாட்டிலேயே பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி அங்கு வசிப்பதே இதற்குக் காரணம். அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு மட்டும் ₹25,75,100 கோடியாகும்.

அம்பானி குடும்பத்தினர் மட்டுமே அங்கு வசிக்கும் பஜாஜ் குடும்பத்தினரின் மதிப்பு ₹7,12,700 கோடியாகவும், குமார் மங்கலம் பிர்லா குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ₹5,38,500 கோடியாகவும் இருக்கிறது.
அடுத்தடுத்த இடங்கள்: மும்பைக்கு அடுத்து அதிக பணக்கார குடும்பங்களைக் கொண்ட நகரமாகக் கொல்கத்தா இருக்கிறது. அங்கே மொத்தம் 17 கோடீஸ்வர குடும்பங்கள் இருக்கிறது. அதைத் தொடர்ந்து புனே, டெல்லி மற்றும் குருகிராம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. புனேவில் 15 கோடீஸ்வர குடும்பங்கள் இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் குருகிராமில் தலா 13 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன.
சென்னை எங்கே: இதன் பின்னர் சென்னை வருகிறது. சென்னையில் மட்டும் 11 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. சென்னையைப் போலவே நொய்டாவிலும் 11 கோடீஸ்வர குடும்பங்கள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 66 கோடீஸ்வர குடும்பங்கள் நாட்டின் மற்ற நகரங்களில் உள்ளன.

இந்த டாப் 200 கோடீஸ்வர குடும்பம் நடத்தும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் $1.3 டிரில்லியனாக இருக்கிறது. இது சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications