எந்த மாநிலங்களில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்! எந்த மாநிலங்களில் 7 கட்டங்களிலும் தேர்தல்- லிஸ்ட் இதோ
டெல்லி: லோக்சபா தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், எந்த மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது எந்த மாநிலங்களில் பல கட்டமாகத் தேர்தல் நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் 2024க்கான தேதிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். வரும் ஜூன் 4இல் முடிவுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல்: அதாவது மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதேநேரம் மூன்று மாநிலங்களில் ஏழு கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எந்த மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எந்த மாநிலங்களில் தேர்தல் அதிக கட்டங்களில் நடைபெறுகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்,
யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை கிட்டதட்ட அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே பாதுகாப்பு காரணங்களால் மொத்தம் 5 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு யூனியன் பிரதேசமாக இருக்கிறது.
மாநிலங்கள்: அங்கே இந்த முறை லோக்சபா தேர்தல் உடன் சட்டசபைத் தேர்தலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இது தொடர்பான கேள்விக்கு. பாதுகாப்பு காரணங்களால் தான் அங்கே ஒரே நேரத்தில் இரு தேர்தல்களை நடத்த முடியவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். மேலும், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அங்கே சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
சரி இப்போது விஷயத்திற்கு வரும. எந்த மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். எந்த மாநிலங்களில் தேர்தல் பல கட்டமாக நடைபெறும் என்பதை நாம் பார்க்கலாம்.
ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: நாட்டில் உள்ள 22 மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவு, ஆந்திரா, சண்டிகர், டெல்லி, கோவா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகண்ட். தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும்.
நாட்டில் இருக்கும் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் இரு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்து இரு மாநிலங்களில் 3 கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. சத்தீஸ்கர், அசாம் ஆகிய இரு மாநிலத்தில் 3 கட்ட தேர்தல் நடக்கிறது.
பல கட்ட தேர்தல்: அதேபோல நான்கு கட்ட தேர்தல்களும் 3 மாநிலங்களில் நடக்கிறது. ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் 3 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. முன்பே கூறியது போல ஜம்மு & காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐந்து கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதுபோக அதிகபட்சமாக 3 மாநிலங்களில் அத்தனை 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களிலும் தேர்தல் நடக்கிறது. இது தவிரப் பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தேதிகள்: லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல்கட்ட தேர்தல் வரும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல 4ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி நடக்கும் நிலையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடக்கிறது.
கடைசிக் கட்ட தேர்தல் மட்டும் வரும் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் நிலையில், வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications