சிஏஏவுக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு.. தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்கள் எதெல்லாம் தெரியுமா? இதோ லிஸ்ட்
டெல்லி: கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் இன்று அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்போதே சிஏஏவுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதில், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக 7 மாநிலங்களில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அது எந்தெந்த மாநிலங்கள் என்பதை இங்கே காணலாம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் நமது நாட்டில் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அரசு கடந்த 2019 இல் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்வதே இந்த சிஏஏ சட்டமாகும்.
அந்த நாடுகளில் மத சிறுபான்மையினராக உள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கம். இந்த சட்டம் மூலம் மத துன்புறுத்தல் காரணமாக அந்த நாடுகளில் இருந்தோர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால், இந்தியாவுக்கு வந்தவர்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். அதாவது தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடமும், கடந்த 14 வருடங்களில் குறைந்தது ஐந்து வருடங்களும் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்.
இதற்கு முன்பு புலம்பெயர்ந்தோர் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக இருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்ற விதி இருந்தது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எழுப்பப்படும் கேள்விகள் மாற்றப்படும், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது எனக் கூறி பல்வேறு தரப்பினர் இதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன
குறிப்பாக இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள மதங்களில் இஸ்லாம் இடம்பெறாததை சுட்டிக்காட்டி ஒரு மதத்தினருக்கு எதிராக இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இலங்கையும் இதில் இடம்பெறாத காரணத்தால் ஈழத் தமிழர்களுக்கும் இதனால் பயனில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரை ஷாகின் பாக் போராட்டங்கள் பல நாட்களாக நடைபெற்றன. அதேபோல், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
அதாவது, சிஏஏவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிக்க கூடாது என்பது எதிர்க்கட்சிக்ளின் வாதமாக இருந்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், புதுவை, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறிய 2019க்கு பிறகு ஓரிரு மாதங்களில் இதற்கு எதிரான தீர்மானங்களை மேற்கூறிய மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றின.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications