அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தால் அதிகரிக்கும் நிறுவன பங்குகள்.. யாருக்கு லாபம் அதிகம் தெரியுமா
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில், இதனால் சில பங்குகள் மதிப்பு அதிகரித்துள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்துக்களின் புனித கடவுளாகக் கருதப்படுபவர் ராமர்... உபி மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பும் நிலையில், அங்கே இப்போது பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி தொடங்கிப் பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தால் அயோத்தியில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல இந்த ராமர் கோயிலால் பல மாற்றங்களும் அங்கே நடக்க உள்ளது.
ராமர் கோயில்: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தால் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிகரிக்க உள்ளன.. அயோத்தியில் இப்போது ராமர் கோயில் திறக்கப்படும் நிலையில், ஒட்டுமொத்த அயோத்தி நகரமும் சுற்றுலாத் தலமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி அயோத்தியின் வளர்ச்சியுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளன.
பங்குகள்: அயோத்தி அருகே சொகுசு கூடாரங்களை அமைத்துள்ள பிரவேக் லிமிடெட், அயோத்தியில் சிசிடிவி கண்காணிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்ற அலைட் டிஜிட்டல் சர்வீசஸ் ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 55% வரை அதிகரித்துள்ளன. அதேபோல காமத் ஹோட்டல்ஸ் இந்தியா நிறுவனப் பங்குகள் அதே ஒரு மாதத்தில் சுமார் 35% அதிகரித்துள்ளன.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். அயோத்தியைச் சுற்றி புனித யாத்திரை மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தப் பல கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அயோத்தியில் ஒரு புதிய விமான நிலையம் மற்றும் ஒரு புதிய ரயில் நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.
சுற்றுலா துறை மேம்படும்: வரும் காலங்களில் அங்கே சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கே ஹோட்டல்கள், கடைகள், வங்கிகள் விரிவாக்கம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கோவிலைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் அங்கே சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும். எனவே, அது சார்ந்த பங்குகள் விலையும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அயோத்திக்கு வருவது குறித்து பக்தர்கள் தேடுவது ஏற்கனவே அதிகரித்துள்ளதாக பிரவேக் லிமிடெட் தெரிவித்துள்ளது. அதேபோல அயோத்தி சிசிடிவி கண்காணிப்பு பணிகளைக் கைப்பற்றிய அலைட் டிஜிட்டல் நிறுவனத்தின் பங்குகள் விலையும் அதிகரித்துள்ளது.
சொல்வது என்ன: இது குறித்து முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகையில், "இந்த பகுதியில் புதிய விமான நிலையம் வந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இது கரையை முழுமையாக விரிவடைய வைக்கும். இதனால் வரவிருக்கும் ஆண்டுகளில் முக்கிய சுற்றுலா மற்றும் பிஸ்னஸ் சார்ந்த நடவடிக்கைகளின் ஆதாரமாக உத்தரப்பிரதேசம் மாறும்" என்று அவர் தெரிவித்தார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள். பல மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்கள், பிஸ்னஸ்மேன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக நாட்டின் பெரும் பணக்காரர்களான கோடீஸ்வரர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோருக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications