தேர்தல் பத்திரங்களை அதிகம் பெற்ற கட்சிகள் எவை! வாரி வழங்கிய நிறுவனங்கள் எவை! லிஸ்டில் திமுக எங்கே
டெல்லி: தேர்தல் பத்திரங்களின் முழு தகவல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், எந்தக் கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை கொடுத்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்களின் பிரத்தியேக எண்ணுடன் கூடிய முழு விவரங்களைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இந்த தேர்தல் பத்திரங்களின் எண்களை மேட்ச் செய்வதன் மூலம் எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு எப்போது நன்கொடை கொடுத்துள்ளது என்பதைக் கண்டறிய முடியும்.

கடந்த 2019 முதல் 2024 வரை தேர்தல் பத்திர முறை அமலில் இருந்த போது தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.12,145.87 கோடி நன்கொடை தரப்பட்டுள்ளது. அதில் டாப் 10 நன்கொடையாளர்கள் மட்டும் 33 சதவீத தொகை, அல்லது ரூ.4,548.30 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாப் யார்: எஸ்பிஐ தரவுகளின்படி, கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் செபாஸ்டியன் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தான் அதிக தொகையை நன்கொடையாக அளித்துள்ளது.. அவரது நிறுவனம் ரூ.1,365 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளது. இரண்டாம் இடத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் இருக்கிறது. அவர்கள் ரூ.966 கோடி நன்கொடை அளித்துள்ளனர்,
தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனமாகக் கூறப்படும் குவிக் சப்ளை செயின் ரூ.410 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. வேதாந்தா நிறுவனம் ரூ. 400 கோடி தேர்தல் பத்திரங்கள் உடன் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் அனல் மின்சார நிறுவனமான ஹால்டியா எனர்ஜி லிமிடெட் ரூ.377 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
நிறுவனங்கள்: சுரங்க நிறுவனமான எஸ்செல் மைனிங் ரூ.224.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது. வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி ரூ.220 கோடி மதிப்பிலான பத்திரங்களைப் பணமாக்கியது. பார்தி ஏர்டெல் ரூ.198 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ள நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த கெவென்டர்ஸ் ஃபுட்பார்க் மற்றும் எம்கேஜே எண்டர்பிரைசஸ் முறையே ரூ.195 மற்றும் ரூ.192.4 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இவை 5 முதல் 10 இடங்களில் வருகிறது.
பாஜகவுக்கு அதிகம்: கடந்த நான்காண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்ச நன்கொடையைப் பெற்ற கட்சியாக பாஜக இருக்கிறது. அவர்களுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது. மேகா இன்ஜினியரிங் தான் பாஜகவுக்கு அதிகபட்சமாக ரூ 519 கோடி நன்கொடை தந்துள்ளது.
குவிக் சப்ளை ரூ.375 கோடியும், வேதாந்தா ரூ.226.7 கோடியும், பார்தி ஏர்டெல் ரூ.183 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளன. இவை தவிர மதன்லால் லிமிடெட், கெவென்டர்ஸ் ஃபுட்பார்க் இன்ஃப்ரா , டிஎல்எஃப் போன்ற நிறுவனங்களும் 100 கோடிக்கு மேல் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது.
அடுத்தடுத்த இடங்கள்: பாஜகவுக்கு அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. லாட்டரி மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் ரூ.542 கோடியை திரிணாமுல் கட்சிக்கு கொடுத்துள்ளனர். இது தவிர ஹல்டியா எனர்ஜி (ரூ. 281 கோடி), தரிவால் இன்ஃப்ரா (ரூ. 90 கோடி), மற்றும் எம்கேஜே எண்டர்பிரைசஸ் (ரூ. 45.9 கோடி) ஆகிய நிறுவனங்களும் திரிணாமுல் கட்சிக்கு அதிக நன்கொடை கொடுத்துள்ளனர்.
இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் வருகிறது. காங்கிரஸ் கட்சி 125 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வேதாந்தா தான் அதிகபட்சமாக 125 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. தொடர்ந்து வெஸ்டர்ன் யுபி டிரான்ஸ்மிஷன் கோ ரூ. 110 கோடி, எம்கேஜே எண்டர்பிரைசஸ் (ரூ. 91.6 கோடி), யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் (ரூ. 64 கோடி), ஏவீஸ் டிரேடிங் (ரூ. 53 கோடி) நன்கொடைகள் அளித்துள்ளன. லாட்டரி மார்ட்டின் நிறுவனம் 50 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளன.
பிராந்திய கட்சிகள்: இந்த லிஸ்டில் அடுத்து தெலுங்கானாவைச் சேர்ந்த பிஆர்எஸ் கட்சி இருக்கிறது. கேசிஆரின் இந்த பிஆர்எஸ் கட்சிக்கு மேகா இன்ஜினியரிங் அதிகபட்சமாக 195 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்துள்ளது. தொடர்ந்து யசோதா மருத்துவமனை ரூ.94 கோடி. சென்னை கிரீன் வூட்ஸ் பிரைவேட் லிமிடெட். லிமிடெட் (ரூ. 50 கோடி), டாக்டர் ரெட்டி லேப்ஸ் (ரூ. 32 கோடி), மற்றும் ஹெட்டெரோ டிரக்ஸ் லிமிடெட் (ரூ. 30 கோடி) நன்கொடை கொடுத்துள்ளது.
திமுக: இந்த பட்டியலில் அடுத்து திமுக வருகிறது. திமுகவுக்கு லாட்டரி மார்ட்டின் நிறுவனம் அதிகபட்சமாக 503 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. தொடர்ந்து மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ. 85 கோடி நன்கொடை அளித்துள்ளது. தொடர்ந்து வெஸ்ட்வெல் கேஸ் (ரூ. 8 கோடி), அஸ்கஸ் லாஜிஸ்டிக்ஸ் (ரூ. 7 கோடி), மற்றும் ஃபெர்டில்லேண்ட் ஃபுட்ஸ் (ரூ. 5 கோடி) ஆகியவை கணிசமாக நன்கொடை அளித்துள்ளது.
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications