Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2019 தேர்தலில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 10 பேர் யார்? எந்த கட்சி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2019 லோக்சபா தேர்தலில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா 10 பேரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.

18-வது லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நாளை மறுநாள் 6-வது கட்ட தேர்தலும் ஜூன் 1-ல் இறுதி மற்றும் 7-வது கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. அனைத்து கட்ட வாக்குகளும் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Who are won with Bigger Margin in 2019 Lok Sabha Election

லோக்சபா தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதனால் லோக்சபா தேர்தல் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. 2019-ம் ஆண்டு தேர்தலில் சாதனை படைத்த வேட்பாளர்கள் மீண்டும் சாதிப்பார்களா? நாட்டிலேயே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லப் போகும் வேட்பாளர்கள் யார்? என்கிற சுவராசிய தகவல்களும் எதிர்பார்ப்புக்குரியவைதான்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை சேர்ந்த 10 வேட்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்.

சிஆர் பாட்டீல்: குஜராத்தின் நவ்சாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் சிஆர் பாட்டீல், காங்கிரஸின் தர்மேஸ் பட்டேலை விட 6,89,668 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் சிஆர் பாட்டீல். தற்போதைய தேர்தலிலும் சிஆர் பாட்டீல் மீண்டும் நவ்சாரியில்தான் போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நைசாத் தேசாய் களம் காண்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் சிஆர் பாட்டீல் 9,72,739 வாக்குகளையும் காங்கிரஸ் தர்மேஸ் பட்டேல் 2,83,071 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 2014-ம் ஆண்டு தேர்தலில் 5,58,116 வாக்குகள் வித்தியாசத்திலும் 2009-ம் ஆண்டு தேர்தலில் 1,32,643 வாக்குக வித்தியாசத்திலும் சிஆர் பாட்டீல் வெற்றி பெற்றிருந்தார்.

சஞ்சய் பாட்டியா: குஜராத்தின் கர்னால் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் பாட்டியா, காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் சர்மாவை 6,56,142 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இம்முறை ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். 2009 தேர்தலில் 76,346 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றது. 2014-ல் 3,60,147 வாக்குகள் வித்தியாசத்திலும் 2019-ல் 6,56,142 வாக்குகள் வித்தியாசத்திலும் கர்னாலில் பாஜக வென்றுள்ளது.

கிருஷ்ணபால் குர்ஜார்: ஹரியானாவின் பரிதாபாத் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அவ்தார் பதானாவை 6.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பாஜகவின் ருஷ்ணபால் குர்ஜார்.

சுபாஷ் சந்திரா: ராஜஸ்தானின் பில்வாரா தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் சுபாஷ் சந்திரா, காங்கிரஸ் கட்சியின் ராம்பால் சர்மாவை 6,11,460 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2009-ல் காங்கிரஸின் சிபி ஜோஷி 1,35,368 வாக்குகளில் இத்தொகுதியில் வென்றார். 2014-ல் 2,46,264 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்தான் சுபாஷ் சந்திரா. இம்முறை சுபாஷ் சந்திராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு தாமோதர் அகர்வால் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி 2009-ல் வென்ற சிபி ஜோஷியை களமிறக்கி இருக்கிறது.

ரஞ்சன்பென் பட்: குஜராத்தின் வதோதரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரசாந்த் படேலை 5.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பாஜகவின் ரஞ்சன்பென் பட்

பிரவேஷ் வர்மா: மேற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மகாபால் மிஷ்ராவை 5,78,486 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பாஜகவின் பிரவேஷ் வர்மா.

சிபி ஜோஷி: காங்கிரஸ் கட்சியின் கோபால் சிங் ஷெகாவத்தை 5.76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பாஜகவின் சிபி ஜோஷி.

அமித்ஷா: குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் சிசி சாவ்தாவை 5.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ்: வடமேற்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குகன் சிங்கை 5.53 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் தோற்கடித்தார்.

உதய் பிரதாப் சிங்: மத்திய பிரதேசத்தின் ஹொசாங்காபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சைலேந்திர திவானை 5.53 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் உதய் பிரதாப் சிங்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+