பாஜகவுக்கு ஷாக்! மோடி அரசின் பொருளாதார கொள்கைகளால் அதிக பலன் யாருக்கு? விவசாயிகள் பதில் இதுதான்
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகள் யாருக்கு பலன் அளிக்கும் வகையில் உள்ளது? என்பது பற்றி இந்தியா டுடே - சிவோட்டர் சர்வேயில் விவசாயிகள் அளித்த பதில் பாஜகவுக்கு ஷாக் அளிக்கும் வகையில் உள்ளது.
டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி கடந்த 13ம் தேதி முதல் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தற்போதும் விவசாயிகள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 5வது நாளை போராட்டம் எட்டி உள்ளது. இந்த போராட்டம் என்பது மொத்தம் 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடக்கிறது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் கூட போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே தான் விவசாயிகளின் போராட்டத்துக்கு முன்பாகவே ‛இந்தியா டுடே' - சி வோட்டர் சார்பில் Mood Of The Nation என்ற பெயரில் 2023 டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் ஜனவரி 28 ம் தேதி வரை மொத்தம் 35 ஆயிரம் பேரிடம் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயில் பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளால் யார் அதிகம் பலன் அடைந்துள்ளனர் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் பதிலளித்துள்ளனர்.
அதன்படி சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அளித்த பதில் அடிப்படையில பார்த்தால் பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகள் பெரிய தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாக 51.7 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு பலனளிப்பதாக உள்ளது என்று 14.4 சதவீதம் பேரும், சம்பளம் வாங்கும் நபர்களுக்கு என்று 9.7 சதவீதம் பேரும், சிறிய வணிகம் செய்வோருக்கு என்று 9.5 சதவீதம் பேரும், தெரியவில்லை என 8.9 சதவீதம் பேரும், தினசரி கூலி வேலை செய்வோருக்கு என்று 4.3 சதவீதம் பேரும், மற்றவர்களுக்கு என்று 1.6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் விவசாய கூலி தொழிலாளர்கள் அளித்த பதிலின் அடிப்படையில் பார்த்தால் பெரிய தொழிலதிபர்களுக்கு என்று 56.6 சதவீதம் பேரும், விவசாயிகளுக்கு என்று 10.4 சதவீதம் பேரும், மாதசம்பளம் பெறுவோருக்கு என்று 4.4 சதவீதம் பேரும், சிறிய வணிகர்கள் என்று 7.7 சதவீதம் பேரும், தெரியவில்லை என்று 7.7 சதவீதம் பேரும், தினசரி கூலிகள் என்று 7.1 சதவீதம் பேரும், மற்றவர்கள் என்று 6.0 சதவீதம் பேர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கூட பிரதமர் மோடி அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு பற்றி கேட்டதற்கு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளில் 39.1 சதவீதம் பேர் திருப்தியடைந்துள்ளதாக கூறி ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேவேளையில நிலமற்ற விவசாய தொழிலாளர்களிடம் 31.1 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் ‛மூட் ஆப் தி நேஷன்' சர்வயேில் பங்கேற்றவர்களில் 39.1 சதவீதம் திருப்தி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications