Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் சிந்தூர்.. கனிமொழியை ரஷ்யா அனுப்பும் மத்திய அரசு.. யார் யார் எங்கு செல்கிறார்கள்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இந்த பொய்களை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. இதில் ஒரு குழுவிற்கு திமுகவின் கனிமொழி எம்பி தலைமை வகிக்க உள்ளார். கனிமொழியின் குழுவினர் ரஷ்யா உள்பட மொத்தம் 5 நாடுகளுக்கு செல்ல உள்ளனர். இந்த 7 குழுக்கள் என்னென்ன? அவர்கள் செல்லும் நாடுகள் என்னென்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. பதிலுக்கு நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.

who-is-7-delegation-team-and-where-will-travel-to-various-countries-to-convey-indias-operation-sin

இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு சண்டையை நிறுத்தியது. இப்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இப்படி கெஞ்சி மோதலை நிறுத்திய பாகிஸ்தான் தற்போது பொய் பிரசாரங்களை கூறி வருகிறது. நம் நாடு நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் இறந்தனர். மசூதிகள் அழிக்கப்பட்டன என்று பொய்களை கூறி வருகிறது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், விமானப்படை தளங்களை அழித்ததாகவும் அவதூறு பரப்பி வருகிறது.

அந்த வகையில் நம் நாடு பாகிஸ்தானின் அப்பாவிகளை குறிவைத்து தாக்கி உள்ளது. நம் நாட்டின் தாக்குதலில் அப்பாவிகள் இறந்துள்ளனர். மசூதி பாகிஸ்தானின் இந்த பொய் பிரசாரங்களை முறியடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து கட்சி எம்பிக்களை உள்ளடக்கி மொத்தம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குழுவை கனிமொழி எம்பி தலைமையேற்று வழிநடத்த உள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூர், பாஜகவின் ரவி சங்கர் பிரசாத் எம்பி, பைஜெயந்த் பாண்டா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகண்ட் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டவர்கள் குழுக்களை வழிநடத்த உள்ளனர். இதில் ஒவ்வொரு குழுக்களிலும் 5 முதல் 6 எம்பிக்கள் வரை இடம்பெறுவார்கள். மொத்தம் 59 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதில் 31 பேர் ஆளும் என்டிஏ கூட்டணியை சேர்ந்தவர்கள். 20 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள்.

இந்த குழுவினர் அமெரிக்கா, பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா, கத்தார், ஐக்கிரஅரபு எமிரேட்ஸ் உள்பட பிற வெளிநாடுகளுக்கு சென்று ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி எடுத்துரைத்து பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்க உள்ளனர். இவர்கள் மே 23ம் தேதிக்கு பிறகு மொத்தம் 32 நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ஓவைசிக்கு இடம்

அதன்படி பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டாவின் குழுவில் பாஜகவை சேர்ந்த எம்பிக்களான நிஷிகாந்த் துபே, பன்னான் கோன்யாக், ரேகா சர்மா, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி, சத்னம் சிங்க சண்டு, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தூதராக இருக்கும் ஹர்ஷ் ஸ்ரிங்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ரவி சங்கர் பிரசாத் குழு

அதேபோல் பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான குழுவில் பாஜகவின் டகுபதி புரண்டேஸ்வரி, சிவசேனா (உத்தவ் அணி) பிரியங்கா சதர்வேதி, குலாம் அலி காட்னா, காங்கிரஸின் அமர் சிங் பாஜகவின் சாமிக் பட்டாச்சாரியா, முன்னாள் அமைச்சர் எம்ஜே அக்பர் தூதர் பங்கஜ் சரண் உள்ளிட்டவர் உள்ளனர். இவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐநா, இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

மலேசியா குழு

மேலும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா தலைமையிலான குழவில் பாஜக எம்பிக்களன அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பாரு, ஹேமங்க் ஜோஷி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டஸ் காங்கிரஸின் சல்மான் குர்ஷித், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான், தூதர் மோகன் குமார் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

கனிமொழி குழு

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஸ்பேயின் கிரீஷ், ஸ்லோவேனியா, லத்திவா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

சசிதரூர் குழு

காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் எம்பி தலைமையிலான குழுவில் எல்ஜேபி (ராம்விலாஸ்) கட்சியின் எம்பி ஷாம்பவி, ஜேஎம்எம் கட்சியின் சர்ப்ராஸ் அகமது, தெலுங்கு தேசம் கட்சியின் ஹரிஷ் பாலயோகி, பாஜக எம்பிக்களான ஷஷாங்க்மணி திரிபாதி, தேஜஸ்வி சூர்யா, புவனேஸ்வர் காலிதா, சிவசேனா கட்சியின் மிலின்ட் முர்ளி தியோரா, தூதர் தரன்ஜித் சிங் சண்டு உள்ளிட்டவர்கள் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

சுப்ரியா சூலே குழு

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) எம்பி சுப்ரியா சூலே தலைமையிலான குழுவில் பாஜக எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி, அனுராக் சிங் தாகூர், முரளீதரன், ஆம்ஆத்மி கட்சியின் விக்ரம்ஜித் சிங் சகானி, காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு, தூதர் சையத்அக்பருதீன், உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்ஆப்பிரிக்காஉள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க உள்ளனர்.

ஷிண்டே மகன் குழு

சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன்) தலைமையிலான குழுவில் பாஜக எம்பிக்களான பன்சுரி ஸ்வராஜ், அதுல் கார்க், மன்னன் குமார் மிஸ்ரா, எஸ்எஸ் அகுல்வாலியா, பிஜேடி கட்சியின் எம்பி சஸ்மித் பாத்ரா, ஐயூஎம்எல் கட்சியின் முகமது பஷீர், தூதர் சுஜான் சினோய் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபேரியா, காங்கோ, சியாரா, லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+