Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்பிஐக்காக யார் ஆஜராகுறீங்க? தேர்தல் பத்திர வழக்கில் தலைமை நீதிபதி கேள்வி! உச்சநீதிமன்றம் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் பத்திரத்தில் நன்கொடை பெற்ற கட்சிகள், நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் தனித்தனியே வெளியிடப்பட்டது. இதில் தேர்தல் பத்திர எண் இல்லாததால் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கினர் என்பதை அறிய முடியவில்லை. இந்நிலையில் தான் இன்று உச்சநீதிமன்றம் எஸ்பிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் வழக்கு விசாரணை தொடங்கியமே, ‛‛எஸ்பிஐ சார்பில் யார் ஆஜராகி உள்ளனர்'' என தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கேள்வி எழுப்பி போட்ட உத்தரவு பரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்தது. கடந்த 2018ல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் எஸ்பிஐ வங்கியில் தேர்தல் பத்திரத்தை வாங்கி அதன்மூலம் பணத்தை வழங்கலாம்.

Who is appearing for the State Bank of India Chief Justice Chandrachud said right at the outset of the hearing

எஸ்பிஐ மூலம்ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இதனை பணம் கொடுத்து வாங்கி தனி நபர்கள், நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். இதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை கடந்த 2 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தேர்தல் பத்திரங்கள் செல்லாது. இதில் வெளிப்படைத்தன்மை தன்மை இல்லை. கடந்த 2019 ஏப்ரல் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6க்குள் வழங்க உத்தரவிட்டது.

ஆனால் எஸ்பிஐ அதனை வழங்காமல் காலநீட்டிப்பு கோரியது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் வரும் 12ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி எஸ்பிஐ சார்பில் கடந்த 12ம் தேதி தேர்தல் பத்திரம் விபரம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்த விபரம் வெளியிட உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று இரவு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டது.

மொத்தம் 2 வகையாக விபரம் வெளியிடப்பட்டது. நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை தொடர்பான விபரம் என்பது 337 பக்கங்களிலும், கட்சிகள் பெற்ற நன்கொடை விபரம் என்பது 426 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்களின் எண்கள் வெளியிடப்படவில்லை. இதனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை செய்துள்ளார்கள் என்ற விபரம் தெரியவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கட்சிகளுக்க எத்தனை தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நன்கொடை சென்றுள்ளது என்ற விபரத்தை மக்களால் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் தான் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் எஸ்பிஐயின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் பத்திரங்களின் எண்களை வழங்காமல் வெறுமனே தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனங்கள், தேர்தல் பத்திரம் மூலம் எந்த நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியதை மட்டும் வெளியிட்டதால் உச்சநீதிமன்றம் அதிருப்தியடைந்தது.

இதனால் இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், ‛‛ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்காக(எஸ்பிஐ) யார் ஆஜராகிறார்கள்? அவர்கள் தேர்தல் பத்திர எண்களை வெளியிடவில்லை. தேர்தல் பத்திர எண்களை எஸ்பிஐ வெளியிட வேண்டும்''எனக்கூறி தான் விசாரணையை தொடங்கினார். மேலும் எஸ்பிஐ ஏன் தேர்தல் பத்திர எண்களை வெளியிடவில்லை? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் தேர்தல் பத்திரம் எண் உள்பட அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்க வேண்டும். மேலும் எஸ்பிஐ தற்போது தேர்தல் பத்திரம் எண்ணை வெளியிடாதது பற்றிய அடுத்த விசாரணையின்போது விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறிய உச்சநீதிமன்றம் எஸ்பிஐக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தேர்தல் பத்திரத்தின் எண்கள் இல்லாததால் யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கினர் என்பது தெரியவில்லை. அந்த விவரங்களையும் உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருப்பதால், இப்போது அனைத்து விவரங்களும் வெளிவரப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+