உதயநிதி, ஜெகன் மோகன், கேடிஆர் யார் பெஸ்ட்? பிரசாந்த் கிஷோர் நறுக் பதில்! இது லிஸ்ட்லயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு முன்னாள் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அளித்த பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நமது நாட்டில் இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதற்குத் தேவையான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கொண்டு வருகிறது. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளது.

Who is best on the new generational politicians answers strategist Prashant Kishor

இதற்கிடையே முன்னாள் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல கேள்விகளுக்குத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது இளம் அரசியல் தலைவர்கள் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் கவனிக்க வைப்பதாக இருக்கிறது

யார் பெஸ்ட்: அதாவது அகிலேஷ் யாதவ், ஆதித்யா தாக்கரே, சிராக் பாஸ்வான், கேடிஆர், ஜெகன் மோகன் ரெட்டி, ராகவ் சதா, உமர் அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின், அபிஷேக் பானர்ஜி இவர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு பிரசாந்த் கிஷோர், "இவர்கள் அனைவரும் அரசியலுக்குத் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டவர்கள். எனவே, இவர்கள் யாரும் இல்லை" என்று பதிலளித்தார்.

வேறு யாரை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு அவர், "என்னால் ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், பில் கேட்ஸ் சொன்ன ஒன்றை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஒருமுறை அவரிடம் ,"உங்களுக்குப் பிறகு யார் உலகின் மிகப் பெரிய பணக்காரராக வருவார் என நினைக்கிறீர்கள்" என்று கேட்டனர்.

அதற்கு பில் கேட்ஸ், "யாரென்று எனக்குத் தெரியாது.. ஆனால் எனக்குப் பதிலாக வரப்போகும் நபர் இப்போது பிஸ்னஸில் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் பிஸ்னஸில் இருந்திருந்தால் இப்போதே நான் உலகில் பெரிய பணக்காரராக இருந்திருக்க மாட்டேன்" என்றார்.

யாருக்கு நல்ல வாய்ப்பு இருக்கு: இன்று அரசியலில் இல்லாத ஒருவருக்கு வரும் காலத்தில் நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றால் அது யாருக்கு என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தத அவர், "ஒருவர் தினசரி 12 மணி நேரம் அரசியலில் செலவிட முடிந்து. அவரிடம் அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான திட்டம் இருந்தாலே போதும்.. யாராக இருந்தாலும் அவருக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்" என்றார்.

கடினம் எது: தொடர்ந்து ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால், ஜெகன், உத்தவ், நித்தேஷ் மற்றும் அம்ரீந்தர் ஆகிய தலைவர்களுக்குச் செய்த பிரச்சாரங்களில் எது மிகவும் கடினமானது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "2017இல் பஞ்சாபில் பிரச்சாரம் செய்தது மிகவும் கடினமாக இருந்தது, ஏனெனில் அப்போது தேர்தல் சமயத்தில் ஆம் ஆத்மி ஒரு வளரும் சக்தியாக இருந்தது. அவர்களைச் சமாளிப்பது கடினமான ஒன்றாக இருந்தது" என்றார்.

அடையாள அரசியல் அல்லது மக்கள் நலன், இவற்றில் எது வலிமையான தேர்தல் ஆயுதம் என்ற கேள்விக்கு அவர், "மக்கள் நலன் தான் முக்கியம்.. உங்களுக்கு எவ்வளவு வலிமையான அடையாளம் இருந்தாலும் சரி.. மக்கள் நலன் இல்லை என்றால் வெல்ல முடியாது. உங்கள் அடையாளம் கொஞ்சம் வாக்குகளைப் பெற்றுத் தருமே தவிர வெற்றியைப் பெற்றுத் தராது" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+