Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலாத்கார ரூம், செக்ஸ் மாத்திரை, ஆபாச படங்கள்! ஆசிரமத்திற்கு கீழ் கொடூரம்! மிரள வைத்த ஜிலேபி சாமியார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜிலேபி பாபா என்று அழைக்கப்படும் அமர்புரி மைனர் உட்பட இளம் பெண்களைக் கொடூரமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். யார் இந்த போலி சாமியார் இவன் என்ன செய்தான் என்பதைப் பார்க்கலாம்..

நம்ம ஊரில் புதிது புதிதாகச் சாமியார்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒரு சாமியார் போய்விட்டார் என்றால்.. மற்றொருவர் வருவார். இதில் பல நேர்மையானவர்கள் இருந்தாலும் கூட சில போலி சாமியார்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

இந்த போலி சாமியார்கள் மக்களை ஏமாற்றுவது பெண்களிடம் அத்துமீறுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இதனால் நமது நாட்டில் கைது செய்யப்பட்ட சாமியார்களின் எண்ணிக்கையே பெரிய லிஸ்ட்டாக போகும்.

 ஜிலேபி பாபா

ஜிலேபி பாபா

அப்படித்தான் பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்து சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஜிலேபி பாபா.. ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தின் தோஹானா என்ற ஊரைச் சேர்ந்த இந்த ஜிலேபி பாபாவின இயற்பெயர் அமர்புரி.. 63 வயதான இந்த ஜிலேபி பாபா, தன்னை தானே சாமியார் என்று அழைத்துக் கொண்டார்.. பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த வழக்கில் அவரை போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்த நிலையில், இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 பலாத்காரம்

பலாத்காரம்

அதாவது குடும்ப சிக்கல்களைத் தீர்க்க வேண்டிப் பல பெண்கள் இவரைத் தேடி வந்துள்ளனர். அவர்களிடம் பாசமாகப் பேசி ஏமாற்றும் இவர், அவர்களுக்கு எப்படியோ மயக்க மருந்தைக் கொடுத்துவிடுவாராம். அவர்கள் மயங்கிக் கிடக்கும்போது, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வார். மேலும், பலாத்காரம் செய்வதையும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்வாராம். அதை வைத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளைப் பறிக்கும் செயல்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரில் இவர் கடந்த 2018இல் கைது செய்யப்பட்டார்.

 ஆபாசப் படங்கள்

ஆபாசப் படங்கள்

இது தொடர்பான வழக்கில் சமீபத்தில் தான் தீர்ப்பளிக்கப்பட்டது. ஒரு மைனர் உட்பட பல பெண்களைப் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்ட நிலையில், போக்சோ சட்டத்தில் 14 ஆண்டுகளும்.. ஐடி சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கைது செய்த போது அவரது மொபைலை போலீசார் ஆய்வு செய்த போது, அவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ஏனென்றால் அவரது மொபைலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் இருந்துள்ளது. அவர்கள் அத்தனை பேரையும் இந்த ஜிலேபி பாபா ஏமாற்றி வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.

 ஜிலேபி வியாபாரி

ஜிலேபி வியாபாரி

அமர்புரி என்ற இந்த ஜிலேபி பாபா தனது இளமைக் காலத்தில் அப்பகுதியில் 'ஜிலேபி' விற்று வந்துள்ளார். தள்ளுவண்டியில் இவர் விற்கும் ஜிலேபி நகரம் முழுக்க ரொம்ப பிரபலமாம்.. இவர் சாமியாக இருந்த போது பாபா பில்லு ராம் என்றே இவரைப் பலரும் அழைத்தனர். இவர் கைது செய்யப்பட்ட பின்னரே இந்த ஜிலேபி பாபா என்ற பெயர் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. ஜிலேபி விற்றுக் கொண்டிருந்த போது சிலர் இவரை, ஆன்மீகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். போலி சாமியாரான இவர், அதன் பிறகு இதையே பிஸ்னஸாக மாற்றிவிட்டராம்.

 பலாத்கார ரூம்

பலாத்கார ரூம்

சாமியாரான பிறகுத் தனது தள்ளுவண்டியை மூடிவிட்டு, ஒரு வீட்டை வாங்கியுள்ளார். சாமியார் ஆன கொஞ்ச நாட்களிலேயே தனக்கென பாதாள அறையுடன் கூடிய ஒரு ஆசிரமத்தையும் இவர் கட்டியுள்ளார். இந்த பாதாள அறையில் வைத்துத் தான் அப்பாவி பெண்களையும் சிறுமிகளையும் அந்த கொடூரன் ரேப் செய்துள்ளான். இதை போலீசார் பலாத்கார ரூம் என்றே குறிப்பிடுகின்றனர். அந்த ஆசிரமத்தில் இருந்து ஆபாச வீடியோக்கள் அடங்கிய சிடி, வீடியோ ரேக்கார்டர்கள், செக்ஸ் மாத்திரைகள் உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 கெட்ட சக்தி

கெட்ட சக்தி

கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இவர் மீது பெண் ஒருவர் பலாத்கார புகாரை அளித்தார். அந்த வழக்கில் இவர் விரைவிலேயே ஜாமீன் பெற்றுவிட்டார். இருப்பினும், காத்திருந்த போலீசார், 2018இல் இவரை ஆதாரங்களுடன் பக்காவாக தட்டி தூக்கிவிட்டது. இவரிடம் 140 ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கெட்ட சக்தியை விரட்ட வேண்டும் என்று வரும் பெண்களை இப்படி பலாத்காரம் செய்துள்ளான் அந்த கொடூரன். பலாத்காரம் செய்யும் முன்பு, பெண்களை தன்னிடம் உள்ளத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் ஒரு புகார் உள்ளது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

தன்னை சந்திக்க வரும் பெண்களிடம் முதலில் அன்பாகப் பேசி நம்பிக்கையைப் பெறுவாராம் இந்த ஜிலேபி பாபா.. டீ குடித்துக் கொண்டே பேசலாம் என்று கூறி டீயை கொடுப்பாராம். சாமியார் என்பதாலும் அன்பாகப் பேசுவதாலும் சந்தேகம் இல்லாமல் அவர்களும் அந்த டீயை குடித்துவிடுவார்களாம். ஆனால், அந்த டீயில் ஜிலேபி பாபா மயக்க மருந்தைக் கலந்து இருப்பது அவர்களுக்குத் தெரியாது. மயங்கிக் கிடக்கும் தனது பெண் பக்தர்களைக் கொடூரமாக வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளான்.

 ஆறு பெண்கள்

ஆறு பெண்கள்

மொத்தம் ஒரு மைனர் உட்பட 6 பெண்களை இந்த ஜிலேபி பாபா பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இருப்பினும், சாட்சியங்கள் அடிப்படையில் மைனர் உட்பட 3 பேர் பலாத்காரம் செய்ததை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பை அளித்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கும் போது, ஜிலேபி பாபா கண்ணீர் விட்டு கதறியதாகவும் தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+