யார் இந்த ராம்விலாஸ்... அரசியல் பின்னணி... இந்திரா காந்தியை எதிர்த்தவர்!!
டெல்லி: மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் 1946ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி பீகார் மாநிலத்தில் இருக்கும் ககாரியா என்ற இடத்தில் பிறந்தார். தலித் குடும்பத்தில் பிறந்தவர். சட்டப் படிப்பை முடித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி டிஎஸ்பியாக பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார். ஆனாலும், அரசியல்தான் இவரது மூச்சாக இருந்தது.

தலைவர்
இதையடுத்து அரசியலில் நுழைய ஆர்வப்பட்டவர் சம்யுக்தா சோஷியலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து பீகார் மாநிலத்தில் தன்னை தலித்துகளின் தலைவராகவும், சிறுபான்மை மக்களின் தலைவராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

காங்கிரஸ்
முதன் முறையாக 1960ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இதையடுத்து அந்தக் கட்சியின் இணை செயலாளராக தேர்வு பெற்றார். இதையடுத்து, நான்கு ஆண்டுகள் கழித்து பீகார் மாநிலத்தில் லோக் தளம் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிறிய கட்சிகளை இணைத்து பீகாரில் பெரிய தலைவராக உருவெடுத்தார்.

கைது
இதையடுத்து இவரது அரசியல் களம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. இதற்குக் காரனம 1975ஆம் ஆண்டில் எமர்ஜென்சியின்போது இவரை இந்திரா காந்தி கைது செய்து சிறையில் அடைத்தார். 1977ஆம் ஆண்டில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தோல்வி
இதன் பின்னர் பீகார் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து எட்டு முறை லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார். 1984, 2009 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவர் தோல்வியை தழுவினார். 2009 ஆம் ஆண்டில் தோல்வி அடைந்து இருந்தாலும், பீகாரில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு பெற்று இருந்தார்.

லோக் ஜனசக்தி கட்சி
இதன் பின்னர் 1985ஆம் ஆண்டில் லோக் தளம் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு பெற்றார். இதையடுத்து 1987ல் ஜனதா கட்சிக்கு சென்றார். இதன் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றார். இந்தக் கட்சி 2000வது இரண்டாக உடைந்தது. பாஜகவில் இணைவதை எதிர்த்து தனிக்கட்சி துவங்கினார். அதுதான் லோக் ஜனசக்தி கட்சி. இந்தக் கட்சிக்கு தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டார்.

அமைச்சர்
மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்குடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் ராம்விலாஸ். மத்தியில் விபி சிங் பிரதமராக இருந்தபோது, இவர் 1996-98 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். துவக்கத்தில் பாஜகவை லோக் ஜனசக்தி ஆதரித்தது. 1999-2001ஆம் ஆண்டில் மத்தியில் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும், 2001-02ல் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

ரசாயனம்
தொடர்ந்து காங்கிரசை விமர்சித்து வந்த பஸ்வான் 2004 காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார். வெற்றி பெற்ற இவருக்கும் ரசாயனம், உரம் மற்றும் ஸ்டீல் என்று இரண்டு அமைச்சரவை வழங்கப்பட்டு இருந்தது. 2009ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

2014 தேர்தல்
பாஜகவுடன் மீண்டும் லோக் சபா மற்றும் பீகார் சட்டசபை தேர்தலின்போது கூட்டணி அமைத்து 2014ல் போட்டியிட்டார். 2019 லோக் சப்பா தேர்தலிலும் நீடித்தது. இதையடுத்து வெற்றி பெற்றவர் மத்திய அமைச்சராக பதவியேற்றார். எதிர்கொண்டு இருக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் தன்னை ஒதுக்கிக் கொண்டு அனைத்து பொறுப்புக்களையும் தனது மகன் சிராக்கிடம் வழங்கி இருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications