மீண்டும் மீண்டும் மைனர் பெண்ணுக்கு லவ் டார்ச்சர்.. வட்டமிட்டு வந்த ரோமியோ.. மும்பை கோர்ட் நெத்தியடி
டெல்லி: மைனர் பெண் என்று தெரிந்தும்கூட, அவர் பின்னாடியே விரட்டி விரட்டி சென்று லவ் டார்ச்சர் தந்துள்ளார் இளைஞர் ஒருவர்.. இதுகுறித்து நீதிமன்றம் தந்துள்ள பரபரப்பு உத்தரவுதான், அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இந்தியாவில் "லவ் டார்ச்சரால்" ஏற்படும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.. 4 நாட்களுக்கு முன்புகூட ஒரு மாணவி இறந்துவிட்டார்.

தெலுங்கானா: தெலுங்கானா கோடாட் நகரத்தில் டிப்ளமோ படித்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.. இவரை, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி லவ் டார்ச்சர் தந்து வந்துள்ளார்..
காதலை ஏற்க முடியாது என்றும், தன் பின்னால் வீணாக சுற்ற வேண்டாம் என்றும் மாணவி எவ்வளவோ சொல்லியும்கூட, இளைஞரின் அட்டகாசம் அடங்கவில்லை. தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, அந்த பெண்ணை விடாமல் துரத்தி துரத்தி டார்ச்சர் தந்துள்ளார்..
தன்னை காதலிக்காவிட்டால், சோஷியல் மீடியாவில் ஆபாசமாக பதிவிட்டு மானத்தையே வாங்கிவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தும் வந்திருக்கிறார்.. ஒருகட்டத்தில் இந்த இளைஞரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல், அந்த பெண் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துகொண்டே சென்றது.
பரிதாபம்: எப்படியும் தான் இறந்துவிடுவோம் என்பதை உணர்ந்த அந்த பெண், 4 நாட்களுக்கு முன்பு ரக்ஷா பந்தன் நாளில், தன்னுடைய அண்ணனுக்கு "ராக்கி" கட்ட ஆசைப்பட்டார்.. சகோதரனின் கையில் ராக்கி கட்டிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்த பெண் உயிரிந்துவிட்டார்.. எந்தவொரு தவறும் செய்யாமல், அந்த பெண்ணின் உயிர் பறிபோய்விட்டது.
இதுபோன்று இன்னும் எத்தனையோ மைனர் பெண்கள், லவ் டார்ச்சரில் சிக்கி தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் அவலம் இந்தியாவில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த துயரத்துக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்படியான சாட்டையடி தீர்ப்பை, மும்பை கோர்ட் ஒருவழக்கில் தந்துள்ளது.
காதல் நிராகரிப்பு: மகாரஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த இளைஞரின் பெயர் மிதுராம் துர்வே.. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி அவர் பின்னாடியே சுற்றி சுற்றி வந்துள்ளார்.. சிறுமி அந்த காதலை நிராகரித்த பிறகும்கூட, அந்த இளைஞர் கேட்கவில்லை.. வலுக்கட்டாயமாக காதலை அந்த சிறுமியிடம் தெரிவித்தபடியே இருந்தார்.
போலீசில் புகார் : மிதுராம் துர்வேயின் இந்த லவ் டார்ச்சர் தாங்க முடியாமல், ஒருநாள் அவரை கன்னத்தில் அடித்துவிட்டார் சிறுமி.. அத்துடன், இந்த சம்பவம் குறித்து போலீஸிலும் புகார் தந்துவிடடார். இதையடுத்து போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி, மிதுராம் துர்வேவை போக்சாவில் கைது செய்தனர்.
இந்த வழக்கு மும்பை ஹைகோர்ட்டின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கோவிந்த சேனாப் இந்த வழக்கு குறித்து சொல்லும்போது, "இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மிதுராம் துர்வேயின் செயல்பாடுகள் என்பது போக்சோ சட்டத்தின் பிரிவு 11ன் உட்பிரிவு 6ன் கீழ் பாலியல் சீண்டல் தான். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
சாட்சியம் தேவையில்லை: ஏனென்றால் தனக்கு காதலிக்க விருப்பமில்லை என்று சம்பந்தப்பட்ட சிறுமி திட்டவட்டமாக சொன்ன பிறகும்கூட, அவரையே பின்தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.. இது விசாரணையிலும் உறுதியாகியுள்ளது. இதில் சாட்சியங்கள் என்பது புதியதாக ஒன்றும் தேவை கிடையாது.
ஏனெனில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே போதுமானது.. அத்துடன், இளைஞருக்கு எதிராக கொடுக்கப்பட்ட சாட்சியங்களும் நீதிமன்றத்தில் தரப்பட்டிருக்கின்றன.. அதனால், மிதுராம் துர்வே என்ற இளைஞருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சீண்டல் வழக்கு பதிவு செய்தது சரியான ஒன்றாகும். அதற்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது" என்று கூறிய நீதிபதி, மிதுராம் துர்வே தாக்கல் செய்திருந்த மனுவையும் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இப்போது மிதுராம் துர்வே ஜெயிலில் உள்ளார்..
அதிரடி தீர்ப்பு: அந்தவகையில், மைனர் பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல், அவரை பின்தொடர்ந்து மீண்டும் மீண்டும் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்தாலே, அது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றம் தான் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications