இன்னைக்கு ஒரு புடி! உலகமே கொண்டாடும் பட்டர் சிக்கன்.. கண்டுபிடித்தது இவங்க தானா! எதிர்பார்க்கவே இல்ல
டெல்லி: நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கும் பட்டர் சிக்கனை சுற்றி ஒரு முக்கிய வழக்கு நடந்து வருகிறது. உணவு குறித்து என்ன கேஸ்.. அதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகவும் பிரியமான உணவுகளில் ஒன்று பட்டர் சிக்கன்.. நான், புல்கா, சப்பாத்தி போன்ற உணவுகளுக்குப் பட்டர் சிக்கன் தான் மிகவும் ஏற்ற உணவாக இருக்கும். இந்தியா மட்டுமின்றி பிரிட்டனிலும் கூட பலருக்கும் இந்த பட்டர் சிக்கன் தான் மிகவும் பிடித்த ஒரு உணவாக இருக்கிறது.

அசைவ பிரியர்களுக்குப் பட்டர் சிக்கன் என்றால் சைவம் சாப்பிடுவோருக்கு தால் மக்கானி,, ஒட்டுமொத்த உலகமுமே இந்த இரு உணவுகளையும் தான் விரும்பி போட்டிப் போட்டுச் சாப்பிட்டு வருகிறார்கள்.
பட்டர் சிக்கன்: இப்படியிருக்க திடீரென ஒரு பிரச்சினை வந்தது. அதாவது பட்டர் சிக்கனை கண்டுபிடித்து யார் என்பது தான் அந்த கேள்வி.. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. நமது தலைநகர் டெல்லியில் உள்ள இரண்டு புகழ்பெற்ற உணவகங்களான மோதி மஹால் மற்றும் தர்யாகஞ்ச் ஆகிய இரு ஹோட்டல்களும் தாங்கள் தான் இந்த உணவைக் கண்டுபிடித்ததாக வாதிட்டார்கள்.
மோதி மஹாலின் உரிமையாளர்கள் தர்யாகஞ்ச் உணவகத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக முதலில் வழக்கு தொடர்ந்தார். தர்யாகஞ்ச் உணவகம் தாங்கள் தான் பட்டர் சிக்கன் மற்றும் தால் மக்கானியை கண்டுபிடித்தவர்கள் என்று விளம்பரப்படுத்திய நிலையில், அதற்கு எதிராகவே மோதி மஹால் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.
அறிக்கை: இந்த வழக்கு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதலில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சஞ்சீவ் நருலாவ் இந்த வழக்கில் தர்யாகஞ்ச் ஹோட்டல் உரிமையாளர் ஒரு மாதத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், மோதி மஹால் உரிமையாளர்களும் தங்கள் தரப்பு விளக்கத்தை மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். தங்கள் மூதாதையர் மறைந்த குண்டல் லால் குஜ்ரால் என்பவர் பிரிவினைக்குப் பின் இந்த உணவுகளை உருவாக்கியதாகக் குறிப்பிட்டனர். அந்த சமயத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத நிலையில் தந்தூரிக் சிக்கன் பிரிட்ஜ் இல்லாமல் வீணாகியுள்ளது. இதை என்ன செய்யலாம் என குஜ்ரால் யோசித்த போது தான் அவருக்குப் பட்டர் சிக்கன் ஐடியா வந்துள்ளது.
உருவானது இப்படிதான்: குளிர்சாதனப் பெட்டியின்றி காய்ந்துபோகும் தந்தூரிக் சிக்கனை ரீஹைட்ரேட் செய்யவும், அதன் சுவையை மேம்படுத்தவும் தக்காளி, வெண்ணெய், க்ரீம் மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்ட மக்கானி சாஸை குஜ்ரால் கண்டுபிடித்தார். அதேபோல சைவம் சாப்பிடுவோருக்கு இதேபோல தால் மக்கானியை கண்டுபிடித்தார் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
அதேநேரம் மறுபுறம் தர்யாகஞ்ச் உணவகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் சிபல், குஜ்ரால் கதைக்கு ஆதாரமே இல்லை என்று கூறி மறுத்தது. மேலும், தர்யாகஞ்ச் உணவகம் தவறாக எதையும் சொல்லவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
சுவாரசியம்: இதில் சுவாரசியம் என்னவென்றால் மோதி மஹாலை தொடங்கிய குஜ்ரால் மற்றும் தர்யாகஞ்ச் உணவகத்தைத் தொடங்கிய ஜக்கி ஆகிய இருவரும் சேர்ந்து தான் முதலில் மோதி மஹால் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்தனர். இது பாகிஸ்தானின் பெஷாவரில் இயங்கி வந்தது. இருவரும் சேர்ந்து நடத்தி வந்த உணவகத்திலேயே இந்த பட்டர் சிக்கன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு அடுத்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications