வாய் திறந்தாலே சர்ச்சை.. மத்திய அமைச்சராகும் பாண்டி சஞ்சய்.. தெலுங்கானாவில் இருந்து 2 மொத்தம் பேர்
டெல்லி: மோடி அமைச்சரவையில் தெலுங்கு பேசும் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் இருந்து இருவர் அமைச்சராகப் பதவியேற்றுள்ளனர். யார் இவர்கள்.. பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இப்போது பிரதமராகப் பதவியேற்றுள்ளார். என்டிஏ கூட்டணி ஆதரவுடன் மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு ஒருவர் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

அவருடன் மற்ற மத்திய அமைச்சர்களும் பதவியேற்று இருக்கிறார்கள். இதில் தெலுங்கானாவில் இருந்து இரண்டு பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள்.
இரண்டு பேர்: தெலுங்கானா மாநில பாஜக தலைவரும் மோடி 2.oஇல் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவருமான ஜி. கிஷன் ரெட்டிக்கு மீண்டும் இந்த முறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. தெலுங்கானாவில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் ஜி. கிஷன் ரெட்டி அமைச்சரவையில் தொடர்கிறார்.
கிஷன் ரெட்டி: கிஷன் ரெட்டி செகந்திராபாத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தெலுங்கானாவில் உள்ள மற்ற பாஜக தலைவர்கள் போல இல்லாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்ற பெயரைப் பெற்றவர்.. சீனியாரிட்டி அடிப்படையில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
பாண்டி சஞ்சய்: அதேபோல கரீம்நகர் எம்பி பாண்டி சஞ்சய்க்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்த போது, மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இல்லை என்ற சூழல் இருந்தது. அப்போது கேசிஆர் மீது ஆக்ரோஷமான விமர்சனங்களை வைத்து தெலுங்கானாவில் பாஜகவை அங்கு முதலில் உயிர்ப்பித்தவரே இந்த பாண்டி சஞ்சய் தான்.. கடந்த 5 ஆண்டுகளாகத் தெலுங்கானாவில் தனது சர்ச்சை பேச்சுகள் மூலம் பாஜகவை அங்கு லைம் லைட்டிலேயே வைத்திருந்தவர். சர்ச்சை பேச்சுகளுக்குச் சொந்தக்காரரான இவருக்கும் மோடி 3.oஇல் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இந்த இருவருமே ஆர்எஸ்எஸில் இருந்து வந்தவர்கள்.. தெலுங்கானாவில் இருந்து மொத்தம் 8 பேர் பாஜக சார்பில் எம்பியாக தேர்வாகி இருக்கும் நிலையில், இந்த இருவரை தவிர மற்ற 6 பேருமே தெலுங்கு தேசம், காங்கிரஸ் அல்லது பிஆர்எஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள். இவர்கள் இருவர் மட்டுமே நேரடியாக ஆர்எஸ்எஸில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சாதி ரீதியாக பார்த்தாலும் இவர்கள் இருவருக்கும் அமைச்சர் பதவி என்பது முக்கியமானது தான். ஏனென்றால் கிஷன் ரெட்டி மற்றும் பாண்டி சஞ்சய் ஆகியோர் அங்குள்ள இரு முக்கிய சாதிகளான ரெட்டி மற்றும் முன்னுரு காபு சமூகங்களை சேர்ந்தவர்கள். குறிப்பாக சஞ்சய் வடக்கு தெலுங்கானாவைச் சேர்ந்தவர். அங்கு பாஜக வளர்ந்து வரும் நிலையில், இவருக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications